fbpx
Homeபிற செய்திகள்சுதந்திர தினவிழாவை முன்னிட்டு 20 தேசத் தலைவர்கள் ஓவியங்களை மரத்தின் அடி வேரில் வரைந்த கலைஞர்

சுதந்திர தினவிழாவை முன்னிட்டு 20 தேசத் தலைவர்கள் ஓவியங்களை மரத்தின் அடி வேரில் வரைந்த கலைஞர்

கோவை ஓவியக்கலைஞரான கோவை குனியமுத்தூர் யூஎம்டி ராஜா, மகாத்மா காந்தி ஜவகர்லால் நேரு வ உ சிதம்பரானர், சுபாஷ் சந்திரபோஸ், ராஜாராம் மோகன்ராய், காமராஜர், சுப்பிரமணிய பாரதியார், பகத்சிங், பால கங்காதர திலகர், ராஜேந்திர பிரசாத், விவேகானந்தர், அம்பேத்கர், மொரார்ஜி தேசாய், லால் பகதூர் சாஸ்திரி ரவீந்திர நாத் தாகூர், ராதாகிருஷ்ணன், வீரசிவாஜி, அப்துல் கலாம் அசாத், கோகுலே ஜாகிர் உசேன் போன்ற 20 தேசிய தலைவர்கள் இந்திய தேசத்தில் ஆணி வேர்கள் நம் தேசத் தலைவர்கள் என்ற நோக்கில் மரத்தின் அடி வேரில் 20 தேச தலைவர் களின் ஓவியத்தை வரைந்து உள்ளார்.


இது தொடர்பாக அவர் கூறியதாவது; மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, சுபாஷ் சந்திரபோஸ், காமராஜர் மேலும் 20 தலைவர்களின் உருவங்களை ஓவியமாக வர்ணம் கொண்டு வரைந்து உள்ளேன்.

இதில் பச்சை, சிவப்பு, வெள்ளை, நீலம், மஞ்சள் போன்ற வர்ணங்களை பயன்படுத்தி உள்ளேன். மேலும் இந்திய வரைபடமும் 79வது சுதந்திர தினமும் தேசிய கொடியும் இந்திய தேசத்தின் ஆணி வேர்கள் என்ற வாசகமும் வரைந்து உள்ளேன்.


இந்த ஆணிவேர் ஓவியத்தை மூன்று தினங்களாக தொடர்ந்த வரைந்து உள்ளேன். வருகின்ற சுதந்திர தினத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக தேசத் தலைவர்களின் மகத்துவத்தையும் பெருமைகளையும் பள்ளி குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் நினைவு கூறும் விதமாகவும் போற்றும் விதமாகவும் விழிப்புணர்வு செய்துள்ளேன். இதற்கு முன் சீதாப்பழத்தில் அதில் உள்ள கணுவில் 20 தேச தலைவர்களின் ஓவியங் களை வரைந்து உள்ளேன்.


இப்படி ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று வித்தியாசமான ஓவியங்கள் வரைவதை வழக்கமாக செய்து வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img