fbpx
Homeபிற செய்திகள்நஞ்சநாடு பகுதியில் ரூ.1.39 கோடியில் தடுப்புச் சுவர் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் நீலகிரி ஆட்சியர்

நஞ்சநாடு பகுதியில் ரூ.1.39 கோடியில் தடுப்புச் சுவர் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் நீலகிரி ஆட்சியர்

நீலகிரி மாவட்டம், உதகை ஊராட்சி ஒன்றியம், நஞ்சநாடு ஊராட்சிப் பகுதியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில், ரூ.1.39 கோடி மதிப்பில் தடுப்புச் சுவர் கட்டுமான பணிகளை செய்தியாளர் பயணத்தின் போது, மாவட்ட ஆட்சியர் சா.ப. அம்ரித், தொடங்கி வைத்து, பணிகள் நடைபெறும் இடங்களை பார்வையிட்டார்.

பின்னர் ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :
முதல்வரின் ஆணைக்கிணங்க நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய நான்கு ஊராட்சி ஒன்றியங்களிலும் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், சாலை, மின்சாரம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன..

நீலகிரி மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை மற்றும் தென் மேற்கு பருவ மழை ஆகிய இரண்டு பருவ மழை காலங்களில் அதிக மழை பெய்கிற காரணத்தினால், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலைகள் மற்றும் தடுப்புச்சுவர்கள் சேதமடைய வாய்ப்புள்ளன.

கடந்த ஆண்டு பெய்த தென்மேற்கு பருவ மழையின் காரணமாக உதகை ஊராட்சி ஒன்றியத்தியத்திற்கு உட்பட்ட நஞ்சநாடு, இத்தலார் ஆகிய ஊராட்சிப்பகுதியில் பல்வேறு இடங்களில் சேதம் ஏற்பட்டது.

நிவாரண தொகை

சேதம் ஏற்பட்ட பகுதிகளை மா சுற்றுலாத்துறை அமைச்சர், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, மழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகையினையும் வழங்கினர்.

அப்போது, இப்பகுதி பொது மக்கள், இது போன்று மழையினால் ஏற்படும் சேதத்தினை தடுக்க மற்றும் வீடுகளுக்குள் மழை நீர் புகுவதை தடுக்க சுற்றுச் சுவர் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

அதனை தொடர்ந்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் அதற்குண்டான விவரங்கள் சேகரித்து பிரேரணை தயார் செய்யப்பட்டு, அரசிற்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய அனுமதி பெறப்பட்டு, ஊரக வளர்ச்சி முகமை சார்பில், நஞ்சநாடு அம்மனட்டி கிராமத்தில் 3 பணிகள் ரூ.1.39 கோடி மதிப்பிலும், இத் தலார் ஊராட்சி பகுதியில் 5 பணிகள் ரூ.1.21 கோடி மதிப் பிலும் என மொத்தம் ரூ.2.60 கோடி மதிப்பில் 8 இடங்களில் தடுப்புச்சுவர் கட்டும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டு, பணிகள் நடைபெறும் இடங்கள் பார்வையிடப்பட்டன.

மழை காலம் தொடங்குவதற்கு முன்னதாக பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவு றுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உமா மகேஸ்வரி, உதகை வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் செல்வகுமரன்;, உதகை ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் (எ)மாதன், உதகை வட்டாட்சியர் ராஜசேகர், உதகை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்ரீதரன், நந்தக்குமார், நஞ்சநாடு ஊராட்சித்தலைவர் சசிகலா உட் பட பலர் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img