fbpx
Homeபிற செய்திகள்22 ஆண்டுகளுக்கு முன்பு சிக்கலான சிகிச்சை மேற்கொண்ட நபரின் இயல்பு வாழ்க்கை: கேகேஆர் மருத்துவமனை கொண்டாட்டம்

22 ஆண்டுகளுக்கு முன்பு சிக்கலான சிகிச்சை மேற்கொண்ட நபரின் இயல்பு வாழ்க்கை: கேகேஆர் மருத்துவமனை கொண்டாட்டம்

2002ம் ஆண்டில், அப்போது 27 வயதான போனடே தேஜேஸ்வர் ராவிற்கு, குரல்வளைக்குப் பின்னால் அமைந்துள்ள ஹைப்போ ஃபாரிங்க்ஸில் புற்றுநோய் பெரிதும் பரவியிருந்தது கண்டறியப்பட்டது.

அவரது புற்றுநோயின் முற்றிய நிலை காரணமாக KKR ENT மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ரேடியோதெரபி, கீமோதெரபி போன்ற பாரம்பரிய சிகிச்சைகள் பலன க்கவில்லை. இதனால் டாக்டர் K.K. ராமலிங்கம், அர்ப்பணிப்புள்ள அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழுவுடன் இணைந்து, கேஸ்ட்ரிக் புல்-அப் உடன் டோட்டல் லாரிங்கோஃபாரிங்கோ-எசோஃபாஜெக்டமி எனப்படும் ஒரு செயல்முறையை மேற்கொண்டார்.

இது அந்த நேரத்தில் தென்னிந்தியாவில் முதல் முறையாகும்.
இந்த சிக்கலான அறுவை சிகிச்சை இரண்டு அறுவை சிகிச்சைக் குழுக்களைக் கொண்டு சுமார் ஐந்து மணி நேரம் நடைபெற்றது.

குறிப்பிடத்தக்க வகையில், ராவ் அறுவை சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து, அவர் தனது ஆசிரியர் தொழிலுக்குத் திரும்பினார்.
அவரது 22 ஆண்டு வாழ்க்கை பயணம் புற்றுநோய் சிகிச்சையின் வெற்றியாக கொண்டாடப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img