தேசிய செல்லப்பிராணி தினத்தை முன்னிட்டு கோத்ரேஜ் பெட் கேர் குடல் ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் வகையில் நாய்களுக்காக நிஞ்ஜா என்ற ஊட்டச்சத்து உணவை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது.
கோத்ரேஜ் கன்சூமர் ப்ராடக்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு பெட் கேர் வளர்ந்து வரும் சந்தையாக இருக்கிறது. கோத்ரேஜ் நிஞ்ஜா அறிமுகத்தின் மூலம் இந்திய செல்லப்பிராணி உணவு சந்தையில் நுழைவதற்கும் ஜி.பி.சி தனித்துவமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
பல்வேறு இனங்களின் நாய்களுடன் நீண்டகால சோதனைகளுக்கு உட்ப டுத்தப்பட்டுள்ளது. இந் திய செல்லப்பிராணி நாய்களின் விருப்பங்கள் குறித்த ஆழமான புரித லின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த தயாரிப்பு, உண்மையில் அவற்றின் தேவைகளுக்கு ஏற்ற ஊட்டச்சத்தை உறுதி செய்கின்ற உகந்த சுவை, செரிமானம் மற்றும் உள்ளூர் சூழலுடன் பொருந்தக்கூடிய தன்மை ஆகியவற்றை வழங்குகிறது.
கோத்ரேஜ் பெட் கேர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராபர்ட் மென்சீஸ் கூறுகையில், “ஜி.பி.சி பிராண்டின் கீழ் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்படும் கோத்ரேஜ் நிஞ்ஜா, ஆரோக்கியமான நாய் உணவை ஒரு அணுகக் கூடிய விலையில் வழங்குகிறது.
இந்த தயாரிப்பு இந்திய, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அனைத்து தரநிலைகள் மற்றும் வழிகாட்டு தல்களையும் பூர்த்தி செய்கிறது” என்றார்.
கோத்ரெஜ் பெட் கேர் ஆராய்ச்சி – மேம்பாட்டு தலைவர் டாக்டர்
அசோக் பட்டநாயக் கூறுகையில், ”ஒரு நாயின் நோய் எதிர்ப்பு முறை யின் 70% குடலில் இருப் பதால், மோசமான ஊட் டச்சத்து நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத் துகிறது”என்றார்.
தலைமை இயக்க அதிகாரி நிதின் ஜெயின் கூறுகையில் “கோத்ரேஜ் நிஞ்ஜாவின் ஒவ்வொரு உணவு துணுக்கும் நோய் வாய்ப்படும் அபாயத்தை குறைக்கின்ற தொடர் ச்சியான ஊட்டச்சத்து உட்கொள்ளலை உறுதி செய்கிறது” என்றார்.