fbpx
Homeபிற செய்திகள்மருத்துவ மாணவர்களின் கனவை சிதைக்க ஒன்றிய அரசு கொண்டுவரும் நெக்ஸ்ட் தேர்வு-மேட்டுப்பாளையம் கூட்டத்தில் திருச்சி சிவா...

மருத்துவ மாணவர்களின் கனவை சிதைக்க ஒன்றிய அரசு கொண்டுவரும் நெக்ஸ்ட் தேர்வு-மேட்டுப்பாளையம் கூட்டத்தில் திருச்சி சிவா எம்.பி. எச்சரிக்கை

மருத்துவ மாணவர்க ளின் கனவைச் சிதைக்கும் வகையில் நீட் தேர்வைத் தொடர்ந்து நெக்ஸ்ட் தேர்வை ஒன்றிய அரசு கொண்டுவர முயற்சிப்பதாக திருச்சி சிவா எம்பி எச்சரித்துள்ளார்.

நூற்றாண்டு விழா பொதுகூட்டம்

மேட்டுப்பாளையத்தில் திமுக சார்பில் பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுகூட்டம் நடைபெற்றது. இதில் திமுக கொள்கை பரப்பு செயலாளரும் மாநிலங்களை உறுப்பினருமான திருச்சி சிவா பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்திற்கு ஏற்கனவே நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்டு சட்டப்பேரவையில் தீர் மானம் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்கு அனுப்பி வைத்த நிலையில் இதுவரை அதனை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை.

இந்தநிலையில் மாணவர்களுக்கு மேலும் அதிர்ச்சி அளிக்கும் நெக்ஸ்ட் தேர்வை மத்திய அரசு கொண்டுவர திட்டமிட்டுள்ளது. மருத்துவ மாணவர்களின் கனவை சிதைக்கும் இந்த தேர்வு முறை என்னவென்றால் நீட் தேர்வில் வெற்றி பெற்று 5ஆண்டுகள் மருத்துவ பயிற்சி பெற்றாலும் நெக்ஸ்ட் தேர்வில் வென்றால் தான் இனி மருத்துவர் என்ற பேரிடியை மத்திய அரசு திணிக்க உள்ளது.

விரைவில் அந்த அறிவிப்பு வர உள்ளது. இவ்வாறு திருச்சி சிவா பேசினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, முன்னாள் மாவட்ட செயலாளர் சி.ஆர்.ராமசந்திரன், கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.டி. கல்யாணசுந்தரம், மேற்கு ஒன்றிய செயலாளர் சுரேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் அஷ்ரப்அலி, டி.ஆர். சண்முகசுந்தரம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பா.அருண்குமார், நகர செயலாளர்கள் முகமதுயூனுஸ், முனுசாமி, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஹக்கீம், நகர இளைஞர் அணி அமைப்பாளர் ரமேஷ், ரஹிம், உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img