கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்ப மகத்துவ மையத்தில் “மைக்ரோகிரீன்ஸ்- ஆரோக்கிய உணவும், புதிய தொழில் வாய்ப்பும்“ என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இப்பயிற்சி வகுப் பில் தொழில்முனைவோர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் என 145 பேர் பங்கு பெற்று பயனடைந்தனர்.
இந்நிகழ்ச்சியின் துவக்க விழாவில், தமிழ்நாடு வேளாண் மைப் பல்கலைக்கழக தாவர உயிரி தொழில்நுட்பத் துறை தலைவர், முனைவர் கோகிலாதேவி வரவேற்புரையாற்றினார்.
மேலும் அவர் கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் உயிரித் தொழில்நுட்ப மகத்துவ மையம் 1.06 லட்சம் சதுர அடி பரப்பளவில் தமிழ் நாடு அரசின் நிதியுதவியுடன் நிறுவப்பட்டுள்ளது.
இந்த மையத் தின் மூலம், வேளாண்மை உணவு தொழில்நுட்பம், பசுமை உயிரி தொழில்நுட்பம், உயிரித் தொழில்நுட்பம் மற்றும் உயிரி தகவலியல் போன்ற முக்கிய துறைகளில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும் என கூறினார்.
தமிழ்நாடு வேளாண்மை பல்க லைக்கழக விதை மைய இயக்குனர் முனைவர் உமாராணி தனது துவக்க உரையில் மைக்ரோகிரீன்ஸ் என்பது விதைகள் முளைத்த பிறகு முதல் இலைகள் வளர்ந்த உடனே அறுவடை செய்யப்படும் இளம் கீரைகள் ஆகும். இவற்றில் தண்டு மற்றும் விதை இலைகள் (cotyledonss) அனைத்தும் உண்ணத் தக்கவையாக உள்ளன. வளரும் தாவரங்களைக் காட் டிலும் 40 மடங்கு அதிக ஊட்டச்சத்துகளை கொண்டிருக் கும் மைக்ரோகிரீன்ஸ்களில், வைட்டமின் சி, இ, கே, பீட்டா-கேரோட்டின் மற்றும் பாலி பீனால்கள் போன்றவை அடங் கியுள்ளன. இன்றைய நகர வாழ் வியலில், ஆரோக்கியம் என்பது பெரும் கவலையாகியுள் ளது. பச்சை காய்கறிகளின் பயன்பாடு குறைந்து வருவதால், அத்தகைய சந்தையில் மைக்ரோகிரீன்ஸ் என்ற சிறிய ஆனால் சத்தான உணவுகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன எனவும் எடுத்துரைத் தார்.
எக்கோ கிரீன் யூனிட் நிறுவனத் தின் திட்ட இயக்குனர் திரு. எஸ். கே. பாபு தனது பயிற்சி வகுப்பில் மைக்ரோகிரீன்ஸ்கள் குறைந்த முதலீடு, குறுகிய நேரத்தில் அறுவடை செய்யக்கூடிய இந்த பயிர்கள், குறைந்த நிலப்பரப்பில் மற்றும் நீர்நிலைக்கு ஏற்ப பசுமை வளத்தை வழங்குகின்றன என்பதால், பெண்கள் சுய தொழிலாகவும், பசுமை தொழில் முனைவோர். மாணவர்கள், இளை ஞர்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு புதிய சந்தை வாய்ப்பு வழிவகுக்கிறது எனவும் கூறினார்.
இறுதியாக தமிழ்நாடு வேளாண் மைப் பல்கலைக்கழக தாவர உயிர் தொழில்நுட்பவியல் துறை உதவி பேராசிரியர் முனைவர். வே. ராஜன் பாபு நன்றி கூறி, தனது உரையில் உயிரித் தொழில்நுட்ப மகத்துவ மையமானது.
ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக பதினாறு தொடக்க நிறுவனங்கள் மற்றும் ஐந்து நிறுவ னங்களுடன் ஒப்பந்தம் (MoA) செய்துள்ளது எனவும், இந்த மையத்தில் பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவ னங்கள் மற்றும் தொடக்க நிறுவ னங்களுக்கு இடையே புதுமையான கண்டுபிடிப்புகள் மற்றும் அறிவுசார் தொழில்நுட்பங்களை பரிமாற்றம் செய்வதற்கு வழி வகுக் கும். இந்த திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் இளம் திறமையாளர்களை உருவாக்கும். பொது / தனியார் கூட்டு முயற்சியின் மூலம் உயிரி தொழில்நுட்பவியல், உயிர் தகவலியல், மரபியல், மூலக் கூறு கண்டறிதல், மரபணு தனிமைப் படுத்தல், உயிரணு வளர்ப்பு மற் றும் வேளாண் இடுபொருட்கள் ஆகியவற்றை மேம்படுத்த உதவும் என்றார்.