fbpx
Homeபிற செய்திகள்கோவையில் தேசிய அளவிலான பாரா த்ரோபால் விளையாட்டு போட்டி

கோவையில் தேசிய அளவிலான பாரா த்ரோபால் விளையாட்டு போட்டி

கோவை சரவணம்பட்டி ரூபி மெட்ரிகுலேஷன் பள்ளி வளா கத்தில் ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டவுன்டவுன், தமிழ்நாடு பாராத் ரோபால் சங்கம், இந்திய, ஆசிய மற்றும் உலக பாரா த்ரோ பால் கூட்டமைப்புகள் சார்பில் ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்ற 4-வது தேசிய பாரா த்ரோபால் சாம்பியன்ஷிப் கோப் பைக்கான போட்டிகள் நடை பெற்றன.

இந்த போட்டியில், இந்தியா முழுவதிலும் இருந்து 12 மாநிலங்களைச் சேர்ந்த. 350க்கும் மேற்பட்ட வீரர்கள் வீராங்கனைகள் பங்கேற்றனர். போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.

விழாவில் தலைமை விருந்தினராக ரோட் டரி ஆர்.ஐ. மாவட்டம் 3206 அறக்கட்டளைத் தலைவர் ராஜ சேகர், இயக்குநர் சுக், உதவி ஆளுநர் ராஜா மகேந் திரன், பிரேம்குமார், ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டவுன்டவுன் தலைவர் ஸ்ரீநாத், செயலாளர் விக்ரம் குமார், டாக்டர் பாரதி கிருஷ்ண குமார், டாக்டர் வி.ஆல்பர்ட் பிரேம் குமார், டாக்டர் ஷரன், டாக்டர் சி.ஜெயபிரபா, தினேஷ் குமார், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img