fbpx
Homeபிற செய்திகள்தேசிய அளவிலான ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டிகள்- தமிழ்நாடு அணியில் நந்தா கல்லூரி மாணாக்கர்கள்

தேசிய அளவிலான ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டிகள்- தமிழ்நாடு அணியில் நந்தா கல்லூரி மாணாக்கர்கள்

தேசிய அளவிலான 19வது தரைப்பந்து (ஆக்கி) சாம்பியன்ஷிப் விளையாட் டுப் போட்டிகள், பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் இருக்கும் திருஹத் உடற்கல்வி கல் லூரியில் செப்டம்பர் 4-ம் தேதி முதல் 7ம் தேதி வரை நடைபெறுகிறது. பல மாநிலங்களில் இருந்து தரைப்பந்து வீரர்கள் பங்கேற்று விளையாட உள்ளனர்.

இதில் நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் இருந்து ஆண்கள் அணியில் குக சரவணன். லோகித். வினோத். ஜெய் கிருஷ்ணா. பெண்கள் அணியில் மேனகா, ரம்யா, கோபிகாதேவி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

மேலும் ஈரோடு மாவட்ட தரைப்பந்து சங்க கௌரவ தலைவரும் அரசு தரப்பு வழக்கறிஞருமான திருமலை, துணைத் தலைவர் மணிகண்டன், மாவட்ட செயலாளரும் உடற்கல்வி இயக்குனருமான தேவகாந்தன் ஒருங்கிணைப்பாளர் லோக நாதன், ஜி.எஸ்.டிரேடர்ஸ் நிர்வாக இயக்குனர் பொருளாளர் ஸ்ரீதேவி செந்தில்குமார், இணை பொருளாளர் சுபத்ரா ரகுநாதன், ஆலோசகர் பத்மினி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கலையரசு, ஈரோடு சிறகுகள் செயலாளர் சிவக்குமார் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ரத்தன்பிரிதிவ், ஜெயின் பல்கலைக்கழகம் டாக்டர் அருண் பிரசன்னா, ஈரோடு மாவட்ட புகைப்பட சங்க முன்னாள் தலைவர் செல்வராஜ் மற்றும் இணை செயலாளர் அன்பரசு. கான்புட் ஆட்டோ போட்டின் இயக்குனர் மனோகரன், நியூட்ரிசன் நிபுணர் மற்றும் ஆலோசகர் அமுதா ராகவன், தினேஷ், பிஹெச்ஏ ஏற்றுமதி ஜெயகாந்தன், வினோத், பாபுடிட்டோ, மனோஜ் குமார், சௌத்ரி, உடற் கல்வி இயக்குனர்கள் டாக்டர் சங்கர், டாக்டர் பிரபு, கோவிந்தராஜ், ராஜகோபால், பிரபாகரன், பிரியதர்ஷினி, சரண்யா, பரமசிவம், ஈரோடு மாவட்ட தரைப்பந்து சங்க தலைவர் சூரியமூர்த்தி தமிழ்நாடு அணி வெற்றி பெற வாழ்த்துகளை தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img