fbpx
Homeபிற செய்திகள்கோவை நிர்மலா கல்லூரியில் புதிய தொழில்நுட்பங்கள் மூலம் நூலக வளர்ச்சி தேசிய கருத்தரங்கம்

கோவை நிர்மலா கல்லூரியில் புதிய தொழில்நுட்பங்கள் மூலம் நூலக வளர்ச்சி தேசிய கருத்தரங்கம்

கோவை, நிர்மலா கல்லூரி மகளிர் கல்லூரியின் நூலகத்துறை மற்றும் சென்னை, நூலகம் மற்றும் தகவல் மேம்பாட்டு அமைப்பு இணைந்து தேசியக் கருத்தரங்கம், “புதிய தொழில்நுட்பங்கள் மூலம் நூலக வளங்களை பயனாளர்களுடன் இணைத்தல்” எனும் தலைப்பில் நடைபெற்றது.

நேற்றும் இன்றுமாக நடந்த கருத்தரங்கில் கோவை நிர்மலா மகளிர் கல்லூரி நூலகத்துறையின் தலைவர் இணைப்பேராசிரியர் முனைவர் அருட்சகோதரி ஜாக்குலின் மேரி வரவேற்றுப்பேசினார்.

நிர்மலா மகளிர் கல்லூரியின் செயலர், முனைவர் அருட்சகோதரி குழந்தை தெரஸ், முதல்வர், முனைவர் அருட்சகோதரி மேரி பபியோலா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு விருந்தினரும், அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் அறிவியல் உயர்கல்வி நிறுவனத்தின் துணைவேந்தருமான முனைவர் பாரதி ஹரிசங்கர், பேசுகையில், இன்றைய டிஜிட்டல் யுகத்தில் நூலகர்களின் பங்கு மற்றும் நூலகங்கள் தங்கள் பயனாளர்களின் மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய எவ்வாறு மாற்றியமைக்க வேண்டும் என்பது பற்றி பேசினார்.

நூலகம் மற்றும் தகவல் மேம்பாட்டு அமைப்பின் நிறுவனர், தலைவர் முனைவர் ஹரிஹரன், நூலகம் மற்றும் தகவல் மேம்பாட்டு அமைப்பு நூலக மேம்பாட்டிற்காக எடுத்துச் செல்லும் முயற்சிகள் மற்றும் சிறப்புகளைப் பற்றி எடுத்துரைத்தார்.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் நூலகர் முனைவர் சாரங்கபாணி நூலக மேம்பாட்டிற்காக நடைபெறும் தேசியக்கருத்தரங்கின் சிறப்பினை எடுத்துரைத்து, இதனைப் போன்று பல கருத்தரங்குகள் நடைபெற வேண்டும் என்பதை முன் வைத்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள நூலகர்கள், நூலக மேம்பாட்டிற்காக பணியாற்றும் வல்லுநர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

மேலும் இரண்டு நாட்களும் நூலக தொழில்நுட்ப மேம்பாடு தொடர்பான கருத்துக்களை 200க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள், நூலக தொழில்நுட்பம், பயனர் அனுபவம் மற்றும் தகவல் திறன் ஆகியவற்றில் சமீபத்திய போக்குகள், மற்றும் உத்திகள் ஆகியவற்றை ஆராயும் வகையில் தங்கள் கருத்துக்களை வழங்கினர்.
தேசியக்கருத்தரங்கமானது ,சிந்தனையைத் தூண்டும் விவாதங்கள், மற்றும் விளக்கக்காட்சிகள், கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு பெற்றது.

படிக்க வேண்டும்

spot_img