தூத்துக்குடி நாம் இந்தியர்கட்சி கொள்கை விளக்க பொதுக் கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் பொன்ராஜ், தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் ஜெய்கணேஷ். தென்மண்டல செயலாளர் ராமசந்திரன், தெற்கு மாவட்ட செயலாளர் சங்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடக்கு மாவட்ட செயலாளர் கருப்பசாமி வரவேற்றார்.
நாம் இந்தியர் கட்சி மாநில தலைவர் என்.பி. ராஜா கலந்து கொண்டு பேசிய தாவது:- நாம் இந்தியர் கட்சி 7-ம் ஆண்டு தொடக்க விழா ஆரம்பமாகியுள்ள நேரத்தில் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் சிறிய செடியாக வளர்ந்துள்ளது. 2026-ம் ஆண்டில் எங்கள் கட்சி எம்.எல்.ஏ. தேர்ந்தெ டுக்கப்பட்டு சட்டமன்றம் செல்வார். எங்கள் இலக்கு 2031- தமிழகத்தில் ஆட்சி அமைப்பது தான்.
மீண்டும் மோடி பிரதமரானால் இந்தியாவில் சர்வாதிகாரம்‘ தலை தூக்கும். மோடி தற்போது நான் கேரண்டி தருகிறேன் என்று பல் வேறு அறிவிப்புகளை இந்தியில் பேசி வெளியிட்டு வருகிறார். அதற்கு தமிழர்கள் ஏமாற மாட்டார்கள்.
இந்தியாவை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்கிறேன் என்று பெரு மையாக பேசிக் கொள்கிறார். மக்களின் கஷ்டம் தெரியாதவர் மோடி. இதுவா முன்னேற்றம். பாராளுமன்ற தேர்தலில் பாஜக400 இடத்தில் வெற்றி பெறும் என்று கூறுகிறார்.
அப்படி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தால் எல்லோருமே ஏழையாகும் நிலைக்கு தள்ளப்படுவோம். அந்த அளவிற்கு தேவையில்லாத பல திட்டங்கள், சட்டங்கள் மூலம் பொதுமக்கள் பாதிக்கப் படுகின்றனர். வரும் தேர்தலில் நாம் இந்தியர் கட்சி போட்டியிடும். அதற்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாநில நிர்வாகிகள்’ சரவணக் குமார், ரூஸ்வெல்ட், முருகன், சுந்தர், உடையார், சுயம்பு லிங்கம், மாவட்ட நிர்வாகிகள் அமிர்த காந்தன், சுரேஷ் பெருமாள், மாரிமுத்து, சின்னத்துரை, குட்டி, ஜேசு ராஜன், பிரபாகரன், மாநகர நிர்வாகிகள்கிகள் முருகேசன், பரமசிவம், நஜீமுதின், இசக்கிகுமார், பெரியசாமி, சீனிவாசன், மற்றும் அம்பல கிருஷ்ணன், லிங்ககுமார், ராஜன், லட்சுமண பாண்டியன், திருமணிச் செல்வன், செந்தில்குமார், கணேசன், தங்கராமன், கின்ஸ்ஜோசப் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநகர பொருளாளர் விக்டர் நன்றி கூறினார்.



