கோவை பீளமேடு அண்ணாநகரில் உள்ள மாநகர் மாவட்ட திமுக செயலாளர் அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், கட்சி நிர்வாகிகளுடன் மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ) “மண்,மொழி, மானம் காத்திட”, “ஓர ணியில் தமிழ்நாடு” திட்டத்தின்படி வீடு வீடாகச் சென்று திமுகழக உறுப்பினர் சேர்க்கையை, தீவிரப்படுத்துவது குறித்து பேசினார்.
இந்நிகழ்வில், தலைமை செயற்குழு உறுப்பினர் பி.ஆனந்தகுமார், பொதுக் குழு உறுப்பினர்கள் ஆடிட்டர் வெ.சசிகுமார், நோயல் செல்வம், சரஸ்வதி புஷ்பராஜ், மாநகர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இராதன பால், வழக்கறிஞர்அணி அமைப்பாளர் வழக்கறிஞர் அன்புச் செழியன், பொறியாளர் அணி அமைப்பாளர் நா.பாபு, சுற் றுச்சூழல் அணி அமைப்பாளர் ஸ்ரீ சத்யா, கோவை தங்கம், வழக்கறிஞர் சி.கண்ணன், வழக்கறிஞர் முத்து விஜயன், வழக்கறிஞர் நிஜலிங்கப்பா, வழக்கறிஞர் ரவிச்சந்திரன், வழக்கறிஞர்கள் வெங்கடாசலம், எலிசபெத், பி.பிரபாகரன், சி.என்.சந் திரன், இளைஞரணி துணை அமைப்பாளர் க.மணிகண்டன், ஐடி விங் நாராயணன், மாண வர் அணி துணை அமைப்பாளர் பைந்தமிழ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண் டனர்.



