தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் பெரியகுளம் தொகுதி எம் எல் ஏ சரவணகுமார் ஆகியோர் நேற்று காலை தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்து கலெக்டர் ஷஜீவனாவிடம் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து 18-ம் கால்வாய் திட்டம், பி டி ஆர் கால்வாய் மற்றும் தந்தை பெரியார் கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர்.
அப்போது மாவட்ட கலெக்டர் ஷஜீவனா , தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தங்க தமிழ்செல்வனிடம் தண்ணீர் திறக்க முடியாததற்கான காரணங்களை தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 18-ம் கால்வாய் திட்டம், தந்தை பெரியார் கால்வாய் மற்றும் பிடிஆர் கால்வாய் பாசனத்திற்கு முல்லைப் பெரியாறு அணையிலி ருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என வலியுறுத்தி கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தோம். கலெக்டர் சில அரசு ஆணைகளின் படி தண்ணீர் திறக்க முடியா ததற்கான காரணங்களை தெரிவித்தார்.
முல்லைப் பெரியாறு அணையில் தற்போது 8,592 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. முல்லை பெரியாறு அணை நீரைக் கொண்டு அரசாணைப்படி முதல் கட்டமாக மேலூர் பகுதியில் உள்ள விவசாயி களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்.
ஆனால் போதிய நீர் இருப்பு இல் லாத காரணத்தால் மேலூர் பாசனத்திற்கே தண்ணீர் திறந்து விட முடியாத சூழ்நிலை உள்ளது. இந்நிலையில் மேலூர் பகுதி பாசன விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கடந்த 7-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வருகிறது .
விசாரணையின் போது மேலூர் பகுதி விவசாயத்திற்கு மட்டுமல் லாமல் 18 – ம் கால்வாய் பி.டி.ஆர் ,தந்தை பெரியார் கால்வாய்களுக்கும் தண் ணீர் திறப்பது குறித்து நீதிமன்றம் உத்தரவிடுவது பொருத்து தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது.
இப்பகுதிகளுக்கு எல்லாம் தண்ணீர் திறக்க வேண்டும் என்றால் 16,962 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு இருக்க வேண்டும்.
ஆனால் தற்போது 8,592 மில்லியன் கன அடி மட்டுமே தண்ணீர் உள்ளது கேரள பகுதியில் மழை குறைந்துள்ளது. அணைக்கும் நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது இயற்கை பொய்த்து போயுள்ளதால் தற்போது குடிநீர் தேவைக்காக மட்டும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது மழை பெய்து நீர்வரத்து அதிகரிக்கும் போது விவ சாயிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படும்.
இந்த உண்மை நிலை தெரியாமல் அதிமுகவினர் விவசாயிகளை குழப்பம் வகையில் போராட்டம் நடத்தி இருக்கின்றனர் . ஏதோ நானும் பெரியகுளம் தொகுதி எம்எல்ஏ சரவணகுமாரும் சேர்ந்து முல்லைப் பெரியாறு அணை நீரை அரபிக் கடலுக்கு திருப்பி விட்டது போல அதிமுகவினர் மக்களை திசை திருப்புகின்றனர்.
முல்லைப் பெரியாறு அணை பகுதியில் மழை போதிய அளவு பெய்யாத காரணத்தால் தண்ணீர் திறக்க முடியாத நிலை உள்ளது மழை பெய்து நீர்வரத்து அதிகரித்ததும் நிச்சயமாக தமிழக முதல்வர் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக தண்ணீர் திறந்து விட உத்தரவிடுவார் என தெரிவித்தார்.



