fbpx
Homeபிற செய்திகள்மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே மலை ரயில் மீண்டும் இயக்கப்பட்டது

மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையே மலை ரயில் மீண்டும் இயக்கப்பட்டது

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து குன்னூருக்கு தினசரி மலை ரயில் போக்குவரத்து இயக்கப்பட்டு வரும் நிலையில் இந்த ரயிலில் பயணம் செய்ய உள் நாடுகள் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் காத்திருந்து பயணம் செய்து வருகின்றனர்.

ஆனால் பருவமழை காலங்களில் அடிக்கடி மலை ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டு ரயில் போக்குவரத்து தடைபட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 20 ஆம் தேதி மண்சரிவு ஏற்பட்டு மலைரயில் போக்கு வரத்து பாதிக்கபட்டது.

ஹில்கிரோ – ஆடர்லி ரயில் நிலையம் இடையே மண்சரிவு ஏற்பட்டதால் மலைரயில் போக்குவரத்து 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் ரத்து செய்யப்பட்டது.

இதனையடுத்து மண்சரிவை சீரமைக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில் அப்பணிகள் முடிவுற்று இரண்டு நாட்களுக்கு பின்பு இன்று மீண்டும் மலை ரயில் போக்குவரத்து இயக்கப்பட்டது.

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து 130க்கும் மேற்பட்டோர் சுற்றுலா பயணிகளுடன் மலை ரயில் குன்னூர் புறப்பட்டு சென்றது.

படிக்க வேண்டும்

spot_img