fbpx
Homeபிற செய்திகள்தொ.மு.ச. முன்னாள் பொருளாளர் மு.கோவிந்தராசன் நினைவஞ்சலி கூட்டம்

தொ.மு.ச. முன்னாள் பொருளாளர் மு.கோவிந்தராசன் நினைவஞ்சலி கூட்டம்

கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் தொழிலாளர் சங்க முன்னேற்ற பேரவை மாவட்ட கவுன்சில் முன்னாள் தலைவரும் மற்றும் தொ.மு.ச. வின் 40ஆண்டு கால மாவட்ட பொருளாளருமான மறைந்த மு.கோவிந்தராசனின் 23ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி நடந்தது.


இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, மு.கோவிந்த ராசனின் மகன் கோ.நாகராசன் ஆகியோர் ஆதரவற்றோர் இல்லத்திற்கு ஊக்கத்தொகையை வழங்கினார்கள்.

இதில் மாவட்ட துணைச் செயலாளர் கோட்டையப்பாஸ், தொமுச நிர்வாகிகள் எஸ். கோபால், விவேகானந்தன், தமிழ்ச்செல்வன், ராக்கி முத்து, அலுவலகப் பொறுப்பாளர் பூபாலன், 49வது வட்ட செயலாளர் தாஸ், பகுதி நாகராஜன், கணேசன், ஸ்ரீதர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img