இந்தியாவின் முதல் மெடிடரேனியன் உணவகமான ஃப்ளெசாஸோ இப்போது சென்னை திநகரில் திறக்கப்பட்டுள்ளது. மொத்தம் 12 அவுட்லெட்களில் சென்னை முதல் அவுட்லெட் ஆகும்.
பூனே, பெங்களூரு, குண்டூர், ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் ஏனைய அவுட்லெட்கள் உள்ளன.
பிராண்ட் நிறுவனர் மற்றும் சிஇஓ ஜெயகண்ணன் கூறியதாவது:
‘ஃப்ளெசாஸோ’ என்னும் ஸ்பானிஷ் சொல்லின் பொருள் ‘முதல் பார்வையிலேயே கண்டதும் காதல்’. இதை நிரூபிக்கும் வகையில் எங்கள் உணவகத்துக்கு வரும் விருந்தினர்கள் சூழல், உணவு மற்றும் சேவை ஆகியவற்றைப் பார்த்த மாத்திரத்திலேயே அவை மீது பிரியம் கொள்வர் உணவு பரிமாறும் வணிகம் என்பதை விடவும், மகிழ்ச்சி மற்றும் குதூகலத்தைப் பரப்பும் வணிகம் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளோம். ஃப்ளெசாஸ்லோ குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் மிகுந்த நேர்த்தியுடன் தேர்வு செய்யப்படுவதுடன், குடும்ப உறுப்பினர்களைக் கவனிப்பதுபோல் விருந்தினர்களையும் அக்கறையுடன் கவனிக்கக் கற்றுத் தருகிறோம் என்றார்.
மெடிடரேனியன் மற்றும் ஆசியப் பிராந்தியங்களின் ஃப்யூஷன் உணவை இங்கு சுவைக்கலாம்.
நிறைவு தரும் வகை வகையான உணவுகளுடன், இல்லங்களில் பரிமாறுவது போன்ற இயல்பான சேவையையும் பெறலாம். லைவ் கவுண்டரில் 40 உணவு வகைகள், மேசையில் 14 ஸ்டார்டர்கள், நேசுரல் ஸ்டோன் ஐஸ்க்ரீம், சாக்லேட் ஃபவுண்டன், லைவ் வேஃபிள்ஸ், லைவ் ஜிலேபி கவுண்டர் உள்ளிட்ட 20+ டெஸ்சர்ட்கள் உள்ளன.
ஃப்ளெசாஸோ பிரத்யேகக் கைபேசி செயலி மூலம் வேண்டிய உணவை ஆர்டர் செய்து கொள்ளலாம். ஸ்விக்கி மற்று ஜொமேடோ மூலமும் கிடைக்கும்.



