fbpx
Homeபிற செய்திகள்மக்களை தேடி மருத்துவ திட்ட ஊழியர்கள் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு

மக்களை தேடி மருத்துவ திட்ட ஊழியர்கள் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு

ஈரோடு கலெக்டர் அலு வலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.

மாவட்டத் தில் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த மக்கள் தங்களது பிரச்சினைகள் குறித்து கலெக்டரிடம் மனுக்களை வழங்கினர். அப்பொழுது மக்களை தேடி மருத்துவத் திட்ட ஊழியர்கள் திரண்டு வந்து மனு கொடுத்தனர் அதில் அவர்கள் கூறியி ருப்பதாவது:-

எங்களது வேலை நேரத்தை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நிர்ணயம் செய்ய வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட நேரத் தில் பணியாற்றும் இந்த ஊழியர்கள் முழு நேர பணியாளர்கள் என அங்கீகரிக்க வேண்டும்.

நோய் கண்டறிதல் சிகிச் சைக்கான தொடர் பணிகளில் ஈடுபடுதல் பணியாளர்களுக்கு ஒதுக் கப்பட்ட வட்டத்தில் பல் வேறு தரவுகளை கண் டறிய வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ள பணிகளை செய்யக்கூடிய இந்த ஊழியர்கள் தன்னார் வலர்கள் அல்ல மருத்துவ துறையின் ஊழியர்கள் என்று அறிவிக்க வேண்டும்.

எங்கள் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ. 26 ஆயிரம் என நிர்ணயிக்க வேண்டும். பணியாற்றுவதற்கு தேவையான சாதனங்களான செல்போன் இணைய வசதி பதிவேடுகள் வழங்க வேண்டும்.

பணியாற் றுவதற்கு செல்வதற்கான பயண செலவு மற்றும் வாகன எரிபொருள் செலவை கொடுக்க வேண்டும். கூடுதலாக சுமத்தப்பட்டுள்ள பணிகளான பிரதமர் காப்பீடு திட்டத்தில் பயனாளிகளை சேர்ப்பது, புற்றுநோய் கண்டறிவது பல்வேறு தரவுகளை பதிவு செய்ய வேண்டும் என்பவை உள் ளிட்ட வேலை பளுவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img