தூத்துக்குடி கடந்த ஜூன் மாதம் 28ம் தேதி நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் ஒவ் வொரு புதன்கிழமையிலும் ஓரு மண்டலத்திலும் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டதின் அடிப்படையில் பழைய நகராட்சி வளாகத்தில் உள்ள கிழக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற நான்காவது குறைதீர்க்கும் முகாமிற்கு மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி ஆணையர் சொர்ணலதா தலைமை வகித்தார். கிழக்கு மண்டல தலைவர் கலைச்செல்வி, பொறியாளர் சரவ ணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமை தொடங்கி வைத்து மேயர் ஜெகன் பெரியசாமி பேசியதாவது:
இந்த மண்டலத்தில் ஏற்கனவே நடைபெற்ற 3 கூட்டத்தில் 173 மனுக்கள் வாங்கப்பட்டுள்ளது. அதில் 165 மனுக்களுக்கு தீர்வு காணப்பட் டுள்ளது. 4 மனுக்கள் நிலுவையில் இருக்கின்றன. 4 மனுக்களில் சில வில்லங்கள், குளறுபடி இருக்கின்றன/ மற்றப்படி பட்டா பெயர் மாற்றம், பிறப்பு சான்றிதழ், பெயர் பிழைகள் உடனடியாக சரிசெய்ய ஆணை வழங்கியுள்ளோம்.
சாலை வசதிகள் பொறுத்தவரை கிழக்கு மண்டல சாலைகள் வரிசைப் படி போடவுள்ளது. எல்லா பகுதி சாலைகளையும் சரி செய்து போட சொல்லி ஆணை வழங்கியுள்ளோம்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதி தொழில்நிறுவனங்கள் நிறைந்த பகுதி முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் உத்தரவிற்கிணங்க கார் தொழிற் சாலை வரவுள்ளது, முத்துநகர், மற்றும் ரோச் என இரண்டு பீச் உள்ளது, தூத்துக்குடி துறைமுக பகுதியில் உள்ள ஹார்பர் பீச்சை 8 கோடி ரூபாய்செலவில் சென்னை மெரினா கடற்கரை போல் புதுபிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் நகர அமைப்பு திட்ட செயற்பொறியாளர் ரெங்கநாதன், சுகாதார ஆய்வாளர் ராஜசேகர், இளநிலை பொறியாளர்கள் செல்வம், பாண்டி, மாநகராட்சி சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், கவுன்சிலர்கள் பேபி ஏஞ்சலின், ஜான்சிராணி, எடின்டா, மகேஸ்வரி, தனலட்சுமி, அந்தோணி பிரகாஷ் மார்ஷலின், வட்ட செயலாளர்கள் கதிரேசன், பொன்ராஜ், போல்பேட்டை பகுதி பிரதிநிதி ஜோஸ்பர், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், உள் பட பொதுமக்கள் அரசுத்துறை அலு வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.



