தொலைநோக்கு மிக்க தலைமைத்துவத்துக்கான விருதை என்எல்சி தலைவர் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளிக்கு டாப் ரேங்கர்ஸ் மேனேஜ்மென்ட் கிளப் என்ற அமைப்பு வழங்கியது.
இந்த கிளப் ஏற்பாடு செய்திருந்த 24-ஆவது தேசிய மேலாண்மை உச்சி மாநாடு டெல்லியில் நடை பெற்றது . நிகழ்ச்சியில் டெல்லி மேலாண்மை நிர்வாகக் கழகத்தின் தலைவர் வி.எம்.பன்சால்,டாப் ரேங்கர்ஸ் மேனேஜ்மென்ட் கிளப் தலைவர் விஎஸ்கே சூட் ஆகியோர் முன்னிலையில், என்எல்சி தலைவர் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளியிடம் தொலைநோக்குமிக்க தலைமைத்துவத்துக்கான விருதை ரயில்வே வாரியத்தின் முன்னாள்
தலைவரும், ஏர் இந்தியா நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமான அஷ்வனி லோஹானி வழங்கினார்.