fbpx
Homeபிற செய்திகள்குப்புசாமி நாயுடு மருத்துவமனை 72வது நிறுவனர் தின கொண்டாட்டம்

குப்புசாமி நாயுடு மருத்துவமனை 72வது நிறுவனர் தின கொண்டாட்டம்

ஜி.கே.என்.எம் மருத்துவமனை தனது 72வது நிறுவனர் தினத்தை, அர்ப்பணித்த நிறுவனர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கொண்டாடியது.

கோவையில் கடந்த எழுபது வருடங்களுக்கும் மேலாக மருத்துவ சேவை அளிப்பதில் கலங்கரை விளக்கமாக ஜி.கே.என்.எம் மருத்துவமனை உயர்ந்து நிற்கிறது. 1952ம் ஆண்டு 50 படுக்கைகள் கொண்ட தாய் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையாக நிறுவப்பட்டது. மேலும் 650 படுக்கைகள் கொண்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக வளர்ந்துள்ளது.

ஜி.கே.என்.எம். மருத்துவமனை ரோபோ-உதவியுடன் கூடிய அறுவை சிகிச்சைக்கு டாவின்சி ரோபோடிக் அமைப்பு போன்ற அதிநவீன தொழில் நுட்பத்தை நிறுவியுள்ளது.

இந்நிலையில் நிறுவனர் தினத்தை கொண்டாடும் வகையில் மேல்நிலைப்பள்ளியில் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களின் தன்னலமற்ற சேவைகளை பாராட்டி விருதுகள் வழங்கப் பட்டது.

இதில் மருத்துவமனையின் முதன்மை செயல் அலுவலர் டாக்டர்.ரகுபதி வேலுசாமி வரவேற்றார். குப்புசாமி நாயுடு அறக்கட்டளையின் தலைவர் எஸ்.பதி மற்றும் துணைத் தலைவர் ஆர்.கோபிநாத் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஜி.கே.என்.எம்.மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர். மனோகரன் நன்றியுரையாற்றினார்.

படிக்க வேண்டும்

spot_img