fbpx
Homeபிற செய்திகள்33 ஏரிகளுக்கு ரூ.81.46 கோடி மதிப்பீட்டில் 1341 ஏக்கர் பாசன வசதிக்காக புதிய நீர்வரத்து கால்வாய்...

33 ஏரிகளுக்கு ரூ.81.46 கோடி மதிப்பீட்டில் 1341 ஏக்கர் பாசன வசதிக்காக புதிய நீர்வரத்து கால்வாய் வெட்டும் பணிகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் கும்மனூர், மற்றும் போச்சம்பள்ளி வட்டம் தாதம்பட்டி ஊராட்சி, பூதனூர் பகுதிகளில் நீர்வளத்துறை சார்பாக பாரூர் ஏரி கிழக்குப் பிரதான கால்வாய் நெடுகை 15.95 கிலோ மீட்டரிலிருந்து புதிய வழங்கு கால்வாய் வெட்டி ஊத்தங்கரை வட்டங்களில் உள்ள 33 ஏரிகளுக்கு நீர் வழங்கும் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கே.எம்.சரயு நேற்று செய்தியாளர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் கே.எம்.சரயு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: கிருஷ்ணகிரி அணையின் கீழ்புறம் பெண்ணையாற்றின் குறுக்கே நெடுங்கல் அணைக்கட்டு கட்டப்பட்டுள்ளது.

இந்த அணைகட்டிலிருந்து இடதுபுற கால்வாய் மூலம் நீர் பாரூர் ஏரிக்கு செல்கிறது. பாரூர் ஏரியின் கிழக்குப் பிரதான கால்வாய் நெடுகை 15.95 கி.மீ.லிருந்து வலது புறத்தில் ஒரு புதிய வழங்கு கால்வாய் வெட்டி பெண்ணையாற்றில் வெள்ளக் காலங்களில் வரும் உபரி நீரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போச்சம்பள்ளி மற்றும் ஊத்தங்கரை வட்டங்களில் உள்ள 33 ஏரிகள் மற்றும் 8 தடுப்பணைகள் ஆகியவற்றிக்கு கொண்டுச் சென்று பயன் பெறும் வகையில் இத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஊத்தங்கரை வட்டத்தில் உள்ள ரெட்டிபட்டிஏரி, செங்கழு நீர் ஏரி, சின்னகொட்டக்குளம் ஏரி, செட்டிகுளம் ஏரி, தாதனூர் கொங்கனே, காட்டுப்பட்டி ஏரி, கோழிநாயக்கன்பட்டி ஏரி, மேட்டுதாங்கல்ஏரி, வேலம்பட்டி ஏரி, சூளக்கரை ஒன்னக்கரை ஏரி, மல்லாபுரம் ஏரி, தாசம்பட்டி ஏரி, பழையகோட்டை ஏரி, கருகுப்பட்டி (வீராச்சி குப்பம்) ஏரி, குழந்தைகவுண்டன் ஏரி, வண்ணான்குட்டை ஏரி, கீழ்குப்பம்ஏரி, தாதம்குட்டை ஏரி, ஒடஞ்ச ஏரி, புத்தேரி, பரசன ஏரி, புளியந்தோப்பு ஏரி, படவுனூர்ஏரி, அதிவிரயம்பட்டி ஏரி, பசந்தி ஏரி, கோனேரி ஏரி, அழகனேரி பாலாஜிசிங் ஏரி, காரப்பபவுண்டன் ஏரி, தோட்டக்காரன் ஏரி, பாப் பன்ஏரி, ஆண்டிச்சி ஏரி உள் ளிட்ட ஏரிகளுக்கு நீர் நிரம்பும் வகையில் கால்வாய்கள் வெட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இத்திட்டத்தினால் சுமார் 724 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். மேலும் ஈர்ப்பு மண்டலத்தில் உள்ள கிணறுகள் மூலம் 362 ஏக்கர் மற்றும் கால்வாய் செல்லும் நேர்பாட்டின் மூலம் 255 ஏக்கர் ஆக மொத்தம் 1341 ஏக்கர் பயன் பெறும். இத்திட்ட மதிப்பீட்டுத் தொகை ரூ.81.46 கோடியாகும். இத்திட்டத்தின் நீர் சேவை 83.71 மில்லின் கனஅடி ஆகும். இந்நீரை 22 நாட்களில் வழங்க கால்வாய் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பிரதான கால்வாயின் நீளம் 15.875 கி.மீ. ஆகும். கிளைக்கால்வாய் 1- நீளம் 425 மீட்டர், கிளைக்கால்வாய் 2 ன் நீளம் 1050 மீட்டர் மற்றும் இணைப்புக்கால்வாயின் நீளம் 2400 மீட்டர் ஆகும்.

இத்திட்டத்திற்கு 102.21 ஏக்கர் பட்டா நிலம் மற்றும் 9.28 ஏக்கா; புறம்போக்கு நிலம் தேவைப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இவ்வாய்வின் போது நீர்வளத் துறை உதவி செயற்பொறியாளர் அறிவொளி, உதவி பொறியாளர்கள் காளிப்பிரியன், கார்த்தி, ஜெயகுமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img