fbpx
Homeபிற செய்திகள்சாலைப் பணியைத் துவக்கி வைத்த அசோக்குமார் எம்எல்ஏ

சாலைப் பணியைத் துவக்கி வைத்த அசோக்குமார் எம்எல்ஏ

கிருஷ்ணகிரி ஒன்றியம் அகசிப்பள்ளி ஊராட்சி பாலிகான்கொட்டாய் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய பொதுநிதியில் இருந்து 4 லட்சம் ரூபாய் மதிப்பில், மெயின்ரோட்டில் இருந்து தியாகராஜன் வீடு வரை 150 மீட்டர் தொலைவிற்கு சிமெண்ட் சாலை அமைக்கப்படுகிறது. அதே போல், கனகமுட்லு காலனியில், 15வது நிதிக்குழு மானியத்தில் 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பேவர் பிளாக் அமைக்கப்படுகிறது.

இதற்கான பணிகளை கிருஷ்ணகிரி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அசோக்குமார் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். அப்பகுதி மக்கள், கிராமத்தில் பல இடங்களில் சாலை சேதம் அடைந்துள்ளது என்றும், விரைவில் புதிய சாலை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை மனு அளித்தனர். விரைவில் நிதி ஒதுக்கி புதிய சாலை அமைத்துக் கொடுக்கப்படும் என்று எம்.எல்.ஏ., வாக்குறுதி அளித்தார்.

இந்நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர்கள் கண்ணியப்பன், சோக்காடி ராஜன், மாவட்ட கவுன்சிலர் ஜெயா ஆஜி, கவுன்சிலர்கள் ராதா சென்றாயன், நடுபையன், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற இறைஞர் அணி செயலாளர் லட்சுமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img