fbpx
Homeபிற செய்திகள்கொங்கு நேஷனல் மெட்ரிக் பள்ளி 11-ம் வகுப்பு தேர்வில் 100% சதம் தேர்ச்சி

கொங்கு நேஷனல் மெட்ரிக் பள்ளி 11-ம் வகுப்பு தேர்வில் 100% சதம் தேர்ச்சி

ஈரோடு நஞ்சனாபுரம் கொங்கு நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்வு எழுதிய அனைத்து மாணவ மாணவிகளும் 100 சதம் தேர்ச்சியை அடைந்தனா. தேர்வு எழுதியவர்களில் 584 மதிப்பெண்கள் பெற்று சஜய் முதலிடமும், 583 பெற்று ரிதன்யா இரண்டாமிடமும், 578 பெறறு தினேஷ்குமார் மூன்றாமிடமும் பெற்றனர்.

தேர்வு எழுதியவாகளில் 550 மதிப்பெண்களுககு மேல் 18 மாணவர்களும், 500க்கு மேல் 44 மாணவர் களும் பெற்றுள்ளனர். கணிதம் – 3 இயற்பியல் -4 வேதியியல்- 2 கணினி அறிவியல் 5 மாணவர்கள் 100 சதம் மதிப்பெண்கள் பெற்றனர். பள்ளியின் சராசரி மதிப்பெண் 81.48 ஆகும்.

பள்ளி டிரஸ்ட் தலைவர் டாக்டர் சு.குமாரசுவாமி, செயலாளர் சத்தியமூர்த்தி, பொருளாளர், ரவிசங்கர், தாளாளர், தேவராஜா, முதல்வர் மு.மைதிலி ஆகியோர் சாதனை புரிந்த மாணவர்களுக்கு வாழ்த்துக் களை தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img