கரூரில், நடைபெற்ற அகில இந்திய அளவிலான கூடை பந்து இறுதிப் போட்டியில் ஆண்கள் பிரிவில் சென்னை இந்தி யன் வங்கி அணியும் பெண்கள் பிரிவில் ஈஸ்டர்ன் ரயில்வே கொல்கத்தா அணியும் சேம்பியன் பட்டத்தை வென்றது கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருவள்ளுவர் மைதானத்தில் எல்.ஆர்.ஜி நாயுடு நினைவு கோப்பைக் கான 63 ஆம் ஆண்டு ஆண்களுக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டியும், கரூர் வைசியா வங்கி வழங்கிய ஒன்பதாம் ஆண்டு பெண்களுக்கான அகில இந்திய கூடைபந்து போட்டி கடந்த 22 ஆம் தேதி துவங்கி ஆறு நாட்கள் பகல் இரவு ஆட்டங்களாக நடைபெற்றது.
இதில் இந்தியன் கடற்படை அணி, லோனா வில்லா திருவனந்தபுரம் கேரளா மின்சார வாரிய அணி, புது டெல்லி இந்தியன் ரயில்வே அணி, பஞ்சாப் போலீஸ் அணி, புதுடெல்லி இந்திய விமா னப்படை அணி உள்ளிட்ட தலைசிறந்த எட்டு அணிகளும், பெண்கள் பிரிவில் ஐந்து அணிகளும் கலந்து கொண்டு விளையாடி வந்தனர். இதில் ஆண்களுக்கான இந்தப் போட்டி லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடைபெற்றது. பெண்களுக்கான போட்டி லீக் முறையில் நடைபெற்றது.
நேற்று இரவு நடைபெற்ற இறு திப்போட்டியில் டெல்லி ஏர் போர்ஸ் அணி, சென்னை இந்தியன் வங்கி அணி மோதியதில் 52 க்கு 56 என்ற புள்ளி கணக்கில் சென்னை இந்தியன் வங்கி அணி சேம்பியன் பட்டத்தை வென்றது. வெற்றி பெற்ற வீரர்களுக்கு முதல் பரிசு ஒரு லட்ச ரூபாயும் சுழல் கோப்பையும் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
இதே போல பெண்களுக்கான இறுதி போட்டியில் கொல்கத்தா ஈஸ்டர்ன் ரயில்வே அணி சாம்பியன் பட்டத்தை வென்றது அவர்களுக்கு 50 ஆயிரம் ரொக்க பணமும் சுழல் கோப்பையும் வழங்கப்பட்டது.
முன்னதாக இறுதிப் போட்டியில் மோதிய இரு அணி வீரர்களையும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வாழ்த்து தெரிவித்து போட்டிகளை துவக்கி வைத்தார்.



