கோவையில் இருந்து சிறுவாணி செல்லும் சா லையில் உள்ள காருண்யா நகரில் பெதஸ்தா சர்வதேச பிரார்த்தனை மையம் இயங்கி வருகின்றது. இதன் சார்பாக சிறப்பு ஆசீர்வாத பிரார்த்தனை கூட்டம் வரும் 7ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2 மணிக்கு காருண்யா நகரில், பெதஸ்தா பிரார்த்தனை மையம் எதிரில் உள்ள டி.ஜி.எஸ் தினகரன் கலையரங்கத்தில் நடைபெறுகிது.
இக்கூட்டத்தில் இயேசு அழைக்கிறார் நிறுவனரும், காருண்யா நிகர்நிலைப் பல்கலைக்கழக வேந்தரு மான டாக்டர்.பால் தினகரன் குடும்பமாக கலந்து கொண்டு அரு ளுரை வழங்கி, சிறப்பு பிரார்த்தனை செய்கிறார் கள். வாழ்வின் விஷேசித்த தேவைகளுக்காகவும், நல் வாழ்விற்காகவும் சிறப்பு கூட்டப் பிரார்த்தனைகள் ஏறெடுக்கப்படும். மாணவ, மாணவிகளின் சிறப்பு பாடல்களும் இடம் பெறும்.
இக்கூட்டங்களில் கலந்து கொள்வதற்கு வசதி யாக பாப்பம்பட்டி பிரிவு, சித்ரா- அரோமா பேக்கரி, காளப்பட்டி அருகில், கோவில்பாளையம், சரவணம்பட்டி, கணபதி- (இயேசு அழைக்கிறார் பிரார்த்தனை மையம் அருகில், கரடமுத்தூர்- பத்தெரிசல், பொள்ளாச்சி – சேரன் நகர் பிகேடி ஸ்கூல் அருகில், அவினாசிபாளையம் மற்றும் அவினாசி சாலை- (இயேசு அழைக்கிறார் பிரார்த் தனை மையம் அருகில்) ஆகிய பகுதிகளிலிருந்து சிறப்பு பேருந்துகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையத்திலிருந்து காருண்யா நகர் செல்வதற்கும், கூட்ட முடிவில் திரும்பி செல் வதற்கும் பேருந்து வச திகள் அதிகாலையிலிருந்து இரவு வரை ஒழுங்கு செய்யப் பட்டுள்ளன. சிற்றுண்டி சாலைகள், புத்தக சாலை கள் ஆகிய வசதிகள் கூட்ட அரங்கிற்குள் இடம் பெறும்.
காருண்யா மாணவர் சேர்க்கை பற்றி அறிய ஸ்டால்களும் உள்ளன.