தூத்துக்குடி மாநகரில் வெற்றிடங்களில் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுமாறு பொதுமக்களை மேயர் ஜெகன் பெரியசாமிகேட்டுக் கொண்டார்.
தூத்துக்குடி மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் நேற்று பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. இதில், 20வது வார்டு பகுதியில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மேயர் பேசுகையில், மாநகரில் நடைபெற்றுள்ள பணிகள் மற்றும் நடைபெறப் போகின்ற பணிகள் குறித்து பேசினார்.
மேலும், மாநகரில் வெற்றிடங்களில் நீர் தேங்காமலும் கால்நடைகளை பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வண்ணம் சாலைகளிலும் தெருக்களிலும் வளர்க்காமல் பார்த்துக் கொள்ளு மாறும் கேட்டுக் கொண்டார்.
நிகழ்ச்சயில் மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார், மாநகர பொறியாளர் பாஸ்கர், மாநகர சுகாதார அதிகாரி சுமதி, வட்டச் செயலாளர் ரவீந்திரன், சமூக ஆர்வலர் ஜசக், பகுதி சபா நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



