fbpx
Homeபிற செய்திகள்பத்திரிகையாளர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம்

பத்திரிகையாளர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம்

கோயமுத்தூர் பத்திரி கையாளர் மன்றம், ஐ வி கேர் கண் மருத்துவமனையுடன் இணைந்து இலவச கண் மருத்துவ பரிசோதனை முகாமை நடத்தியது.
கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்ற வளாகத்தில் நடந்த முகாமில் சிறப்பு விருந்தினர் கலெக்டர் கிராந்திகுமார் பாடி துவக்கி வைத்தார்.

ஐ வி கேர் கண் மருத்துவமனை மருத்துவர் மனோஜ் வாகில், மருத்துவர் ஸ்ரீதேவி தலைமையிலான மருத்துவர்கள் குழு, பரி சோதனை மேற்கொண்டு ஆலோசனை வழங்கியது.

ஆலோசனைகள்

நவீன யுகத்தில் அதிக நேரம் அலைபேசி, கணினி போன்ற டிஜிட் டல் ஸ்கிரீனிங்கில் செலவிடும் நிலையில், கண்களுக்கு ஒவ்வாமை ஏற்படுத்த கூடும். அதனை தவிர்க்கும் வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

கிட்டப்பார்வை, தூரப் பார்வை, கண் எரிச்சல், கண் சதை வளர்ச்சி , கண் புரை, வறட்டு கண் போன்றவற்றை அறிய ஏதுவாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கோயமுத்தூர் பத்திரி கையாளர் மன்றத்தின் உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்களின் குடும்பத் தாருக்கு இலவச கண் பரிசோதனை முகாம் பெருமளவில் உதவியது.

நலத்திட்ட பணிகளின் ஒரு பகுதியாக இலவச கண் பரிசோதனை முகாமை கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் நடத்தியது. மன்றத் தலைவர் கார்த்தீஸ்வரன், செயலா ளர் மோகன்குமார் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

இதுபோன்ற நலத்திட்ட பணிகளை தொடர்ந்து முன்னெடுப்பதாக மன்ற நிர்வாகிகளும், பத்திரிகை யாளர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக ஐ வி கேர் கண் மருத்துவமனை நிர்வாகிகளும் தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img