தீவிர ஸ்ட்ரோக் பக்கவாத பாதிப்புகளுக்கான சிகிச்சையில் நரம்புக்குழாய் மற்றும் இடையீட்டு கதிர்வீச்சியல் செயல்முறைகளுக்கு ஆதரவளிக்க கேத் லேப்பை தமிழ்நாட்டின் பிரபல மருத்துவமனையான ரேலா மருத்துவமனை நிறுவியிருக்கிறது.
முன்னாள் காவல்துறை தலைவர் டாக்டர். சைலேந்திர பாபு, ரேலா மருத்துவமனையின் தலைவர் முகமது ரேலா ஆகியோர் முன்னிலையில் இந்த கேத் லேப் தொடங்கப்பட்டுள்ளது.
நோயறிதல் மற்றும் சிகிச்சைக்கான நவீன இமேஜிங் தொழில்நுட் பத்தை இந்த லேப் கொண்டிருக்கிறது. சிக்கலான சிகிச்சை களுக்கு விரைவான சிகிச்சையை உறுதி செய்யும் மூளை நரம்பியல் இடையீட்டு சிகிச்சை மருத்துவர்களின் அர்ப்பணிப்புமிக்க ஆதரவோடு இந்த லேப் இயங்கும். இந்நிகழ்வில் டாக்டர். சைலேந்திர பாபு பேசுகை யில், “பக்கவாத பாதிப்பிலிருந்து மீண்டு குணமடைவதற்கு இந்த கேத் லேப் உதவும்“ என்றார்.
ரேலா மருத்துவமனை யின் தலைவர் புரொஃபசர் முகமது ரேலா பேசுகையில்,
“பக்கவாதத்திற்கு குறைவான, பயனளிக்கின்ற மற்றும் பாதுகாப்பான சிகிச்சையை உறுதிசெய்ய தொடங்கப்பட்டுள்ள இப்புதிய கேத் லேப், அனைத்து சாதனங்களையும் கொண்ட ஒருங்கிணைக்கப்பட்ட மையமாக இருக்கிறது” என்றார்.
தொடர்ந்து, ரேலா மையத்தின் கிளினிக்கல் லீட் டாக்டர். சங்கர் பால கிருஷ்ணன், “மருத்துவ முன்னேற்றங்கள், பக்கவாதத்திற்கான சிகிச்சை விளைவுகளை மிகப்பெரிய அளவில் மேம்படுத்தியிருக்கின்றன” என்றார்.