டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை, விழித்திரை சிகிச்சையில் சமீபத்திய முன்னேற்றங்கள் பற்றிய பகிர்விற்காக ரெட்டிகான் 2025ஐ நடத்தியது. “விழித்திரை சிகிச்சையில் முன்னேற்றங்கள்” என்ற கருப்பொருளுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் இந்தியாவிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் 1500க்கும் அதிகமான விழிபடிக விழித்திரை சிறப்பு நிபுணர்கள், கண் மருத்துவம் பயிலும் முதுகலை பட்டதாரிகள் மற்றும் பொது கண் மருத்துவர்கள் பங்கேற்றனர்.
டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் தலைவர் புரொஃபசர் டாக்டர். அமர் அகர்வால் மற்றும் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர். அஸ்வின் அகர்வால் ஆகியோர் முன்னிலை வகித்த ரெட்டிகான் 2025 நிகழ்வை வடசென்னை தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். கலா நிதி வீராசாமி மற்றும் அகில இந்திய கண் சிகிச்சையியல் சங்கத்தின் துணைத் தலைவர் டாக்டர். மோகன் ராஜன் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகப் பங்கேற்று தொடங்கி வைத்தனர்.
இதை வழிநடத்திய சர்வதேச நிபுணர்களுள் டாக்டர். அனிருத்தா அகர்வால், டாக்டர். ஜெஸி செங்கிலோ மற்றும் டாக்டர். கெல்வின்டியோ ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
இது குறித்து டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் தலைவர் டாக்டர். அமர் அகர்வால் கூறுகையில், “ரெட்டிகான் நிகழ்வில் பகிரப்பட்ட அறிவும், தகவலும், அறுவைசிகிச்சை திறன்களையும் மற்றும் மருத்துவ சிகிச்சை செயல்முறையையும் மேம்படுத்தி மெருகேற்றுவதற்கு உதவுகிறது” என்றார்.
டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர். அஸ்வின் அகர்வால் பேசுகையில், “விழித்திரை சிகிச்சையில் மேம்பாடுகள் என்ற ரெட்டிகான் 2025 நிகழ்வின் கருப்பொருள், விழிப்படிக – விழித்திரை நோய்களை கண்டறிவதிலும், சிகிச்சையளிப்பதிலும் நிகழ்ந்து வரும் மிகப்பெரிய முன்னேற்றத்தை பிரதிபலிக்கிறது” என்றார்.