fbpx
Homeபிற செய்திகள்திருப்பூரில் ஹைடெக் மெட்ரோபோலிஸ் புதிய மையம் துவக்கம்

திருப்பூரில் ஹைடெக் மெட்ரோபோலிஸ் புதிய மையம் துவக்கம்

ஹைடெக் மெட்ரோபோலிஸ் திருப்பூர் மாநகரில் அதன் முதல் மேம்பட்ட நோயறிதலுக்கான பரிசோதனை மையத்தை யுனைடெட் ஸ்கேன் சென்டருடன் இணைந்து துவங்கியுள்ளது.

ஏறக்குறைய 4000 ச.அடி பரப்பளவில் நிறுவப்பட்டிருக்கும் இந்த நோயறிதல் பரிசோதனையகத்தால் ஒரு மாதத்தில் சுமார் 3000 உயிரி மாதிரிகளை ஆய்வு செய்ய இயலும். அடிப்படையான நோய் அறிகுறிகளிலிருந்து மிக நவீன, நுட்பமான நோயறிதல் பரிசோதனைகளின் விரிவான தொகுப்பை இந்த பரிசோதனை மையம் வழங்கும்.

இந்நிலையில் இந்த பரிசோதனை மையத்தின் தொடக்க விழா நடைபெற்றது .இந்நிகழ்வை தலைமை விருந்தினராக ஏபிஐ பிசிசியன்ஸ் ரீசர்ச் பவுண்டேஷனின் இயக்குனர் டாக்டர். முருகநாதன் பங்கேற்று தொடங்கி வைத்தார்.

ஹைடெக் மெட்ரோபோலிஸ் நிறுவனத்தின் தமிழ்நாட்டுக்கான பிசினஸ் பிரிவு தலைவர் கார்த்திக்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தலைமை பிசினஸ் அதிகாரி பாலகிருஷ்ணன் கூறுகையில், திருப்பூர் நகரில் மேம்பட்ட உடல்நல பராமரிப்பு மற்றும் நோயறிதலுக்கான சேவைகளின் இந்த அறிமுகமானது, இந்நகரில் உடல்நல சேவைக்கான உட்கட்டமைப்பை இன்னும் மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டிருக்கிறது என்றார்.

தொடர்ந்து தமிழ்நாடு தலைமை அதிகாரி டாக்டர். சுஜா ராமநாதன் மையம் குறித்து பேசினார்.

படிக்க வேண்டும்

spot_img