fbpx
Homeபிற செய்திகள்‘பாதி விலையில் அள்ளிச் செல்லுங்கள்’: கோவை லுலு ஹைப்பர் மார்க்கெட்டில் 4 நாட்கள் பிளாட் 50%...

‘பாதி விலையில் அள்ளிச் செல்லுங்கள்’: கோவை லுலு ஹைப்பர் மார்க்கெட்டில் 4 நாட்கள் பிளாட் 50% மெகா விற்பனை

கோவையின் மையபகுதியில் அமைந்துள்ள லட்சுமி மில்ஸ் வளாகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் திறக்கப்பட்ட லுலு ஹைப்பர் மார்க்கெட், திறப்பு விழா நாள் முதல் இன்று வரை பொருள் விற்பனையில் புதிய மைல் கல்லை எட்டி வருகிறது.
தென்னிந்தியாவின் முக்கியமான வணிக மையங்களில் ஒன்றாக விரைவில் மாறியுள்ளது. திறப்பு நாளிலிருந்து “மகிழ்ச்சியுடன் ஷாப்பிங்” என்ற கொள்கையுடன் செயல்பட்டு வரும் லுலு, பல்வேறு சர்வதேச பிராண்டுகளையும், உள்ளூர் உற்பத்தியாளர்களையும் ஒரே தளத்தில் இணைத்து, கோவை மக்களின் நம்பிக்கையை வென்றுள்ளது. முன்னதாக, லுலு பல்வேறு “மெகா விற்பனை”, “பை 1 கெட் 1” தீபாவளி கொண்டாட்டம் போன்ற சலுகைகளை வழங்கி வாடிக் கையாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் தங்களுக்கு முழு ஆதரவு அளிக்கும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்க வேண்டும் என ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் சிறப்பு விற்பனையை செய்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாக இந்த வருடம் லுலு ஹைப்பர்மார்கெட் வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பிளாட் 50% என்ற மெகா விற்பனையை வருகின்ற 8, 9, 10, 11 ஆகிய நான்கு நாட்கள் நடத்துகிறது.
இதுகுறித்து மண்டல மேலாளர் மகேசன் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்ததாவது:

கடந்த 2023 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட கோவை லுலு ஹைப்பர்மார்க்கெட் பல்வேறு வாடிக்கையாளர்களின் நல்ல ஆதரவுடன் விற்பனையில் புதிய மைல்கல்களை தொட்டு வருகிறோம். ஒவ்வொரு சிறப்பு நிகழ்ச்சிகள் கொண்டாட்டங்கள் நடக்கும் பொழுது, எங்களது வாடிக்கையாளர்களை குஷிப் படுத்தும் வகையில் பல்வேறு சலுகை விற்பனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதன் தொடர்ச்சியாக எங்களது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு பரிசாக ‘பிளாட் 50% தள்ளுபடி’ விற்பனையை அறிவித்துள்ளோம். இதில் மளிகை பொருட்கள், உணவுப் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ், சமையலறை உபகரணங்கள், ஆடைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பாதி விலையில் வழங்கப்படுகின்றன.


மேலும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் புதிய ஆடை வரிசைகள், கடை வெளியே உணவு திருவிழா போன்ற கடை வீதிகள் அமைக்கப்படவுள்ளது. இந்த நான்கு நாட்கள் பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மறக்கமுடியாத ஷாப்பிங் அனுபவத்தை வழங்க உள்ளோம்.

கோவை மட்டுமல்லாது அருகில் உள்ள திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தொடர்ந்து வாடிக்கையாளர்கள் வருகை புரிந்து வருகின்றனர். மேலும் பண்டிகை மற்றும் சலுகை விற்பனை நேரங்களில் சென்னை போன்ற நகரத்திலிருந்து கூட வாடிக்கையாளர்கள் வருகை தந்துள்ளனர்.

எனவே நான்கு நாட்கள் நடைபெறும் பிளாட் 50 சதவீதம் மெகா தள்ளுபடி விற்பனையில் வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்கி அதிக லாபத்துடன் அதிக சேமிப்புடன் அதிக மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொள்ள மகிழ்ச்சியோடு அழைக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். உடன் பொது மேலாளர் பாலாஜி, கொள்முதல் மேலாளர் சுனில் மேனன், மார்க்கெட்டிங் மேலாளர் நவநீத், சூப்பர் மார்க்கெட் மேலாளர் சின்னதுரை, கனெக்ட் துணை மேலாளர் புஷ்பக் உள்ளிட்ட நிர்வாகிகள், ஊழியர்கள் இருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img