fbpx
Homeபிற செய்திகள்ஜிகேஎன்எம் மருத்துவமனை சார்பில் குழந்தைகளுக்கான இருதய அறுவை சிகிச்சை கருத்தரங்கம்

ஜிகேஎன்எம் மருத்துவமனை சார்பில் குழந்தைகளுக்கான இருதய அறுவை சிகிச்சை கருத்தரங்கம்

ஜி.கே.என்.எம் மருத்துவமனை, அமெரிக்காவின் சில்ட்ரன் ஹார்ட்லிங்க் மற்றும் மேயோ கிளினிக் ஆகியவற்றுடன் இணைந்து குழந்தைகளுக்கான இருதய அறுவை சிகிச்சை பற்றிய நேரடி செயல்விளக்கங்கள் மற்றும் விவாதங்களை உள்ளடக்கிய ஐந்தாவது கருத்தரங்கினை கோன் ரிப்பேர் என்ற தலைப்பில் நடத்தியது. இதில் இந்தியா முழுவதிலுமிருந்து சுமார் 40 பிரதிநிதிகள் இந்த கருத்தரங்கில் பங்கேற்று பயனடைந்தனர்.

அமெரிக்காவின் மேயோ கிளினிக்கைச் சேர்ந்த இருதய அறுவை சிகிச்சை பேராசிரியர் டாக்டர் ஜோசப்.ஏ.டீரானி, நிகழ்ச்சியை வழிநடத்தி தனது விரிவான மருத்துவ அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். மேலும் மேயோ கிளினிக்கின் இருதயநோய் நிபுணர் டாக்டர் நாதன் டாகார்ட் மேயோ கிளினிக்கின் தீவிர சிகிச்சை மருத்துவர் டாக்டர் கிரேஸ் அடியாகா மேயோ கிளினிக்கின் இதய மயக்க மருந்து நிபுணர் டாக்டர் மைக்கேல் நெமர்கட் மற்றும் சிலட்ரன் ஹார்ட்லிங்க் மையத்தின் தலைவர் ஜாக்கி பவுச்சர் ஆகிய பேச்சாளர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினர்.

ஜி.கே.என்.எம்.மருத்துவமனை யின் பிறவி இதய குறைபாடுகளுக்கான அறுவை சிகிச்சைத் துறை இயக்குனர் டாக்டர்.விஜயகுமார் கருத்தரங்கினை ஒருங்கிணைத்தார். ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் கார்டியோ தொராசிக் அறுவை சிகிச்சைத் துறை தலைவர் டாக்டர்.சந்திரசேகர் சிறப்பு விருந்தினர்களை வரவேற்றார்.

இந்த கருத்தரங்கம் குழந்தைகள் இதய சிகிச்சையில் எதிர்காலத்தில் ஏற்படுகின்ற முன்னேற்றங்களுக்கும் வழிவகுக்கும் என நிகழ்வில் தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img