fbpx
Homeபிற செய்திகள்கோவை ஜி.கே.என்.எம். மருத்துவமனை இருதய சிகிச்சை துறை 50 ஆண்டுகால சேவை விழா

கோவை ஜி.கே.என்.எம். மருத்துவமனை இருதய சிகிச்சை துறை 50 ஆண்டுகால சேவை விழா

கோவை ஜி.கே.என்.எம்., மருத் துவமனையின் இதய சிகிச்சைத் துறையில் 50 ஆண்டுகால சேவையை கோவையில் உள்ள தி ரெசிடென்சி டவர்ஸில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் கொண்டாடியது.

1974-ஆம் ஆண்டு இதய அறுவை சிகிச்சைத் துறை தொடங்கியதிலிருந்து தரம், புதுமை மற்றும் சிறப்புத்திறன் ஆகியவற்றுக்கு அர்ப்பணிப்புடன் கடந்த ஐம்பது ஆண்டுகளாக வழங்கப்பட்ட சேவையை இந்த விழா சிறப்பித்துப் பதிவு செய்கிறது.

இந்நிகழ்வுக்கு தலைமை விருந்தினராக இந்திய பேட்மிண்டன் அணியின் தலைமை தேசிய பயிற்சியாளரும் பத்ம பூஷண் விருது பெற்றவருமான ஸ்ரீ.புல்லேலா கோபிசந்த் முன்னிலை வகித்தார்.

இதில் முக்கிய விருந்தினர்களாக சங்கரா கண் மருத்துவ அறக்கட்டளை நிறுவனர் டாக்டர்.ராமநாதன்.ஸ் ரமணி, எல்ஜி எக்யூப்மெண்ட்ஸ் லிமிடெட் நிர்வாக இயக்குநர் டாக்டர்.ஜெயராம் வரதராஜ், காசார் புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் டாக்டர்.ரவி கண்ணன் ஆகியோர் கலந்து கொண் டனர். இந்த விழாவை ஜிகேஎன்எம் மருத்துவ மனையின் முதன்மை செயல் அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுசாமி தலைமை தாங்கினார்.

இதில் இதயநோய் நிபுணர்கள், மயக்க மருந்து மருத்துவர்கள் மற்றும் இதய அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் விழாவின் போது கௌரவிக்கப்பட்டனர்.

இது குறித்து இதய அறுவைச் சிகிச்சைத் துறையின் தலைவரும், இதய மாற்று அறுவை சிகிச்சை இயக்குநருமான டாக்டர்.சந்திரசேகர் கூறுகையில், “எங்கள் விரிவான இதய செயலிழப்பு மருத்துவமனை மற்றும் மாற்று அறுவை சிகிச்சை திட்டம் தொடர்ந்து மேம்பட்டு வருகிறது, மேலும் இப்போது குறைந்தபட்ச ஊடுருவல் மற்றும் ரோபோ இதய அறுவை சிகிச்சைகளாக விரிவடைந்துள்ளோம்.

நாங்கள் ஆண்டுதோறும் 1.800க்கும் மேற்பட்ட திறந்த இதய அறுவை சிகிச்சைகளை தொடர்ந்து செய்கிறோம்“ என்றார்.

படிக்க வேண்டும்

spot_img