ஜி ஸ்கொயர், கோவையில் 4 வீட்டுமனை திட்டங்களை அறிமுகம் செய்து 7 நாளில் ரூ.110 கோடி மதிப்பிலான இடங்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இந்த 4 திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ.170 கோடி ரூபாய் ஆகும்.
கோவையில் நீலாம்பூரில் ஜி ஸ்கொயர் பிளிஸ், ராமநாதபுரத்தில் ஜி ஸ்கொயர் உட்லேண்ட், பொள்ளாச்சியில் ஜி ஸ்கொயர் எமரால்டு என்கிளேவ், சரவணம்பட்டியில் ஜி ஸ்கொயர் அர்பனைஸ் ஆகிய 4 வீட்டு மனை திட்டங்களை துவக்கி உள்ளது.
இது குறித்து ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பால ராமஜெயம் கூறுகையில், “கோவையில் நாங்கள் அறிமுகம் செய்துள்ள எங்கள் வீட்டுமனை திட் டங்களுக்கு கிடைத்துள்ள வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.
நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி ஜுனைத் பாபு கூறுகையில், “எங்களின் இந்த புதிய திட்டங்களின் மூலம், அனைத்து வசதிகளுடன் கூடிய உயர்தரமான இடங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறோம்“ என்றார்.
தொடர்ந்து, தேசிய அளவிலான விற்பனைத் தலைவர் சிவகுமார் பெத்தையன் கூறுகையில், வீடு வாங்குபவர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப உலகத்தரம் வாய்ந்த ரியல் எஸ்டேட் திட்டங்களை வழங்குவதில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்“ என்றார்.



