கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்உள்ள ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளியில் 1985 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவ மாணவிகள் 40 வருடங்களுக்குப் பிறகு பெரியநாயக்கன்பாளையத் தில் சந்தித்து தங்கள் மலரும் நினைவுகளை பரிமாறிக் கொண்டனர்.
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் உள்ள தி.அ.தி. கலா நிலையம் நடுநிலைப் பள்ளியில் 1ஆம் வகுப்பிலிருந்து சுவாமி சிவானந்தா மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு வரை படித்த மாணவ மாணவிகளின் சந்திப்பு நிகழ்வு பெரியநாயக்கன் பாளையத்தில் உள்ள ஜிகேடி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு வந்திருந்தவர்களை ராஜா வரவேற்றார்.
நிகழ்விற்கு நாகராஜன், மத்தியாஸ் ஆகியோர் தலைமை வகித்தனர். இந்த சந்திப்பில் 25க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் சந்தித்து தங்களது பள்ளிக் கால மலரும் நினைவுகள், பள்ளியில் அன்றையகால கட்டத்தில் நடந்த நடை பெற்ற சுவையான நிகழ்ச்சிகளையும் மீண்டும்நினை வுப்படுத்தி கூறி மகிழ்ந்தனர்.
மேலும் எதிர்வரும் காலங்களில் இந்த சந்திப்பு நிகழ்விற்கு வராமல் இருந்த இன்னும் 50-க்கும் மேற் பட்ட முன்னாள் மாணவ மாணவிகளை சந்தித்து அவர்களையும் குழுவில் ஒருங்கிணைத்து நலப் பணிகளை மேற்கொள்வது என்றும், மற்றொரு சந்திப்பு நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்து அதில் தங்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களையும் கலந்து கொள்ள செய்வது என்றும், வரும் 2026 ஜனவரி மாதம் 4ஆம் தேதி வித்யாலயத்தில் நடைபெற உள்ள குரு பூஜை விழாவிலும் முன்னாள் மாணவர்களை சந்திப்பது எனவும் தீர்மானித்தனர். நிறைவாக இளமுருகன் நன்றி கூறினார்.



