fbpx
Homeபிற செய்திகள்கிருஷ்ணம்மாள் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகள் அறிமுக விழா

கிருஷ்ணம்மாள் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகள் அறிமுக விழா

கோவை பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு இளநிலை மாணவிகளுக்கான மாணவியர் அறிமுக விழா கல்லூரியின் பொன்விழா அரங்கில் நடைபெற்றது.

விழாவில் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் தலைவர் டாக்டர் ஆர்.நந்தினி வரவேற்புரை வழங்கினார். இதனை தொடர்ந்து கல்லூரியின் முதல்வர் முனைவர் ஹாரத்தி கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி குறித்து உரையாற்றினார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக சாந்தி ஆசிரமத்தின் தலைவர் டாக்டர் கெசெவினோ அறம் கலந்து கொண்டு மாணவிகளிடையே உரையாடினார்.

அப்போது அவர் பெண் கல்வி என்பதே அரிதாக இருந்த காலம் சென்று தற்போது பெண்கள் கல்விக்கு அனைவரும் முக்கியத்துவம் கொடுப்பதாக பெருமிதம் தெரிவித்தார். எனவே மாணவிகள் தங்களுக்கு கிடைத்த கல்வி வாய்ப்புகளை பயன்படுத்தி எதிர்காலத்தை வெற்றி படிக்கட்டுகளாக மாற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

விழாவில் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் பயின்று, தற்போது சேலத்தில் உள்ள தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனத்தில் பொது மேலாளராக பதவி வகிக்கும் மாவட்ட வருவாய் அலுவலர் கீதா பிரியா, கல்லூரயில் தாம் படித்த போது பெற்ற அனுபவங்களையும், மாணவிகள் கல்லூரி கால நேரங்களில் தங்களது திறன்களை எவ்வாறு வளர்த்துக் கொள்வது என்பது குறித்து பேசினார்.

இதே போல, முன்னாள் மாணவிகளான நடிகையும், பாடகி, பாடாலசிரியருமான சாருமதி முரளிதரன், பொருளாதாரவியல் துறையைச் சேர்ந்த மாணவி பார்வதி பிள்ளை ஆகியோர் தங்களது கல்லூரி அனுபங்களை பகிர்ந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் இறுதியில்,கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் மி.னி.கி.சி ஒருங்கிணைப்பாளர் முனைவர் பாலவிஜயலட்சுமி நன்றிகூறினார்

விழாவில் மாணவியர்கள், பெற்றோர்கள்,துறை தலைவர்கள், பேராசிரியைகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

படிக்க வேண்டும்

spot_img