fbpx
Homeபிற செய்திகள்கோவையில் செல்வந்தர்களுக்கு பெடரல் வங்கி முதலீட்டு ஆலோசனை

கோவையில் செல்வந்தர்களுக்கு பெடரல் வங்கி முதலீட்டு ஆலோசனை

கோவையில் பெடரல் வங்கியின் செல்வ மேலாண்மைப் பிரிவு சார்பில், ‘செல்வம் மற்றும் ஞானம்‘ என்ற தலைப்பில் பெரும் செல்வந்த வாடிக்கையாளர்களுக்கான சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
பார்க் எலான்ஸா அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாறிவரும் பொருளாதார சூழல், பங்குச் சந்தை நிலவரம், முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் நீண்டகால செல்வ உருவாக்கம் குறித்து நிபுணர்கள் விளக்கமளித்தனர். பெடரல் வங்கியின் சென்னை மண்டலத் தலைவர் ஜிதேஷ் பி.வி., டிஎஸ்பி அசெட் மேனேஜர்ஸ் நிறுவனத்தின் விநியோகத் தலைவர் உஷா நாயர் ஆகியோர் முதலீட்டாளர்கள் தகவலறிந்த நிதி முடிவுகளை எடுக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து கருத்துகளை பகிர்ந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img