fbpx
Homeதலையங்கம்கள்ளச்சாராய சாவுகள் இனி நடக்கவே கூடாது!

கள்ளச்சாராய சாவுகள் இனி நடக்கவே கூடாது!

மரக்காணம், மதுராந்தகம் பகுதிகளில் கள்ளச்சாராயத்துக்கு 23 உயிர்களை பறிகொடுத்து ஓராண்டு ஆகும் நிலையில், மீண்டும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய 39 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி யையும், துயரத்தையும் தருகிறது. இந்த சம்பவம் எப்படி நடந்தது?

நூற்றுக்கணக்கானோர் கள்ளச்சாராயம் அருந்தும் இடம் காவல்துறை கண்ணில் படவில் லையா அல்லது தெரிந்தும் மறைமுக ஆதரவு அளித்தார்களா? என்ற கேள்வியை மக்கள் எழுப்பி வருகின்றனர்.
அதனால் தான் முதல்வர் மு.க.ஸ்டாலின், உயிரிழப்பு தகவல் வந்த உடனேயே தன் துயரத்தை வெளிப்படுத்திய கையோடு அதிரடி நடவடிக்கை களையும் எடுத்தார். மாவட்ட ஆட்சியர் இடமாற்றம், எஸ்.பி. உள்ளிட்ட காவல்துறை ஆதிகாரிகள் சஸ்பெண்டு என நடவடிக்கை தொடர்கிறது.

தமிழ்நாட்டில் குறிப்பாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ளப் பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதும், அதை விற்பதனால் உயிர்பலி ஆவதும் தொடர்கதையாக உள்ளது. கள்ளச்சாரயம் காய்ச்சுபவர்கள், அதனை விற்பவர்களை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும். கள்ளச்சாராயம் காய்ச்சு வதை மதுவிலக்கு போலீசார் தொய்வின்றி கண்காணித் தால் தான் இதுபோன்ற சம்பவம் இனி நடக்கா மல் தடுக்க முடியும். மாவட்ட நிர்வாகமும் விழிப்புணர் வுடன் செயல்படவேண்டும்.

கள்ளச்சாராய வியாபாரிகள் மற்றும் கடமை தவறிய காவல்துறையினர் உட்பட தவறிழைத்தவர்கள் அனைவரின் மீதும் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை பாய வேண்டும்.
சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்பு நேர்ந்திருந்தாலும் அத்தனை பேரும் ஏழைகள். அவர்களின் குடும்பத்தினருக்கு ஏற்பட்ட சோகம், இழப்பு சொல்லி மாளாது. அதனை ஈடுகட்டும் வகையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மீண்டும் இதுபோன்ற சம்பவம் நிகழாவண்ணம் தடுக்க ஒரு நபர் விசாரணைக் கமிஷனையும் முதல்வர் அமைத்து உத்தரவிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு சம்பவம் அரசு அதிகாரிகளுக்கும் போலீசாருக்கும் ஒரு பாடமாக அமையட்டும்!

படிக்க வேண்டும்

spot_img