முத்துதேவன்பட்டியில் பெண்கள் முதியோர்கள் ரேஷன் பொருட்களை வாங்குவதற்காக மெயின் ரோட்டை கடக்கும் போது விபத்து ஏற்படுகின்றது. மேலும் முதியோர்கள் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல சிரமப்படுகின்றார்கள்.
இந்நிலையில் மக்களின் சிரமங்களை குறைக்கும் பொருட்டு மேலும் ஒரு நியாய விலை கடை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதனையடுத்து ஊர் தலைவர் மணிகண்டன் முன்னிலையில் செயலாளர் செந்தில் குமார் வரவேற்பு உரையாற்ற தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் புதிய நியாய விலை கடை திறந்து வைக்கப்பட்டது.
பின்னர் எம்பி வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வீரபாண்டி ஒன்றிய, பேரூர், கிளை செயலாளர்கள் 5, 6 வது வார்டு கவுன்சிலர்கள் உடன் வீரபாண்டி பேரூராட்சி தலைவர் கீதா சசி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.