சேலம் பெரியார் பல்கலைக்கழக அறிவுசார் சொத்துரிமைகள் பிரிவு சார்பில் பாரம்பரிய பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவது குறித்த சிறப்பு சொற்பொழிவு மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. அறிவுசார் சொத்துரிமைகள் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற கருத் தரங்கில் கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக அறிவு சார் சொத்துரிமை பிரிவு ஒருங்கிணைபாளர் பேரா சிரியர் உஷா ராஜ நந்தினி கலந்துகொண்டு புவிசார் குறியீடு பெறுவது குறித்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது: பாரம்பரிய பொருட்கள், ஒவ்வொரு பகுதியிலும் சிறப்பு பெற்ற பொருட்கள், விவசாய விளை பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறும் போது, அந்த பொருட் களுக்கான மதிப்பு சர்வதேச அளவில் கூடுகிறது. நமது நாட்டில் பாரம்பரியமான, ஆச்சரி யபடுத்தும் பல பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. ஆனால், அதற்கு உரிய அங்கீகாரம் கிடைக்காமல் உள்ளது. அதற்கான அங்கீகாரம் தான் புவிசார் குறியீடு ஆகும். தற்போது கொடைக்கானலில் பூண்டு நன்றாக விளையும். அந்த பூண்டு சிறப்பு வாய்ந்த பூண்டாக உள்ளது.
அதேபோல இந்த பூண்டு ஊட்டியில் விளைவது இல்லை. அங்கு விளைந்தாலும், அந்த மண்ணின், தட்பவெப்ப தன்மைக்கேற்பவே விளையும். அதேபோல ஊட்டியில் தேயிலை விளைகிறது. ஆனால், கொடைக்கானலில் தேயிலை விளைவது கிடையாது. அதுபோல ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு பொருட்கள் சிறப்பு வாய்ந்தவையாக உள்ளது. அதற்கு உரிய அங்கீகாரம் பெற புவிசார் குறியீடு பெற வேண்டும். இவ்வாறு பேராசிரியர் உஷா ராஜ நந்தினி பேசினார்.
தொடர்ந்து புவிசார் குறியீடு பெற எவ்வாறு விண்ணபிக்க வேண்டும், அதனை தாக்கல் செய்யும் வழிமுறைகள், என் னென்ன ஆவணங்களை தாக்கல் செய்ய வேண் டும் என்பது குறித்து செயல் விளக்கம் அளித்தார். மேலும், மாணவர்கள் மற்றும் தொழில் முனைவோரின் சந்தேகங்களுக்கு உரிய விளக் கங்களை வீடியோ காட்சிகள் மூலம் விளக் கம் அளித்தார்.



