ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனைக்கு சிறந்த மருத் துவமனைக்கான விருதினை தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.
ஈரோடு பெருந்துறை சாலையில் அபிராமி கிட்னி கேர் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. 1985ம் ஆண்டு ஈரோட்டில் டாக்டர் கே.தங்கவேலு, அவரது பெயரிலேயே ஒரு மருத்து வமனையை தொடங்கினார்.
தரமான மருத்துவம் தடையின்றி கிடைத்திட வேண்டும் என்ற நோக்கத்தில் 40 ஆண்டு கால மருத்துவ சேவையில் பல்லாயிரக்கணக்கான மக்களின் அபிமானத்தை பெற்று தங்கவேலு மருத்துவமனை இயங்கி வந்தது.
தந்தையின் வழியிலேயே அவரது மகன் டாக்டர் சரவணன் தலைமையில், டாக்டர் தங்கவேலு மருத்துமனையின் புதிய பரிமாணமாக அபிராமி கிட்னி கேர் துவங்கப்பட்டது.
இந்த மருத்துவமனையில் ஈரோடு மற்றும் கரூர் பகுதி மக்கள் தரமான சிறுநீரகம் தொடர்பான சிகிச் சைகள் வழங்கப்பட்டு வருகிறது. குறுகிய காலகட்டத்திலேயே 50க்கும் மேற்பட்ட வெற்றிகரமான சிறுநீரக உறுப்பு மாற்று சிகிச்சைகளை நடத்தி சாதனை படைத்துள்ளது.
ஈரோட்டில் முதன் முறையாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனை என்ற பெயரை இந்த மருத்துவமனை பெற்றது. ஈரோட்டிலேயே மிகப் பெரிய டயாலிசிஸ் சென்டர், ஹை பிலக்ஸ் ஹீமோடயாலிசிஸ் என்ற நவீன இயந்திரம் போன்ற பல்வேறு வசதிகளை அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டு, மக்களுக்கு சிறந்த சிகிச்சை அளித்து வருகிறது.
மேலும், பொதுமக்களுக்கு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் ஆரோக்கியம் குறித்து பல்வேறு வகை களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி, தர மான மருத்துவ சிகிச்சை மக்களுக்கு சென்றடைவதை உறுதி செய்து வருகிறது.
இந்நிலையில், கோவையில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையின் சேவையை பாராட்டும் வகையில் விருது வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் சரவணனுக்கு, அபிராமி கிட்னி கேர் மருத்துவமனை ஈரோட்டில் சிறந்த கிட்னி கேர் மருத்துவமனை என்ற பைனாக்கிள் விருதினை (Pinnacle Award) வழங்கி கவுரவித்தார்.