கோவை ஆடிஸ் வீதியில் உள்ள கோயம்புத்தூர் பத்திரிக்கையாளர் மன்றத்தில் தமிழ்நாடு அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது கூட்டமைப்பின் தலைவர் முத்துரத்தினம், மாநில பொதுச்செயலாளர் ஜெய பால், பொருளாளர் கோவிந்தராஜ் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 2022, 2023, 2024 ஆம் ஆண்டுகளில் இருந்து ஆண்டுக்கு ஒரு முறை உயர்த்தி வரும் மின் கட்டணம் மற்றும் இதர துணை கட்டணங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும் அது ரத்து செய்யப்பட்டவில்லை.
தொடர்ச்சியாக 2025 ஆம் ஆண்டான இந்த வருடமும் மின் கட்டணத்தை உயர்த்தி விடக்கூடாது. 12 கிலோ வாட் மின் நுகர்வோர்களுக்கு 3 பி கட்டண முறையில் இருந்து 3 ஏவுக்கு மாற்ற சட்டசபையில் அறிவித்தும் அரசாணை வெளியீட்டும் அதனை நடைமுறைப்படுத்தாமல் உள்ளனர். மின்சார நிலை கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். தொழிற் சாலை கூரையின் மீது அமைக்கப்பட்ட சூரிய ஒளி மின் தகடுகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கு நெட் வொர்க் கட்டணத்தை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும். மேலும் வெல்டிங் தொழிலுக்கு விதிக்கப்படும் 15% கூடுதல் கட்டணத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
மேலும் தொழிலாளர்க ளின் உடல் நலன் மற் றும் தொழில்துறை நலன் கருதி மதுக்கடைகளை பகல் நேரத்தில் திறப்பதை தவிர்த்து மாலை நேரங்களில் கடைகளை திறக்க அரசு ஆவன செய்ய வேண்டும். சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும். அதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை நேரடியாக சந்தைப்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் வணிக வளாகம் அமைத்திட வேண்டும்.
ஏற்றுமதி இறக்குமதி கொள்கைகளை MSME தொழில்துறையினர் பாதிக்காத வண்ணம் அமைத்திட வேண்டும் எனவும் QOC BIS சட்டங்களை ரத்து செய்திட மத்திய அரசிடம் சிறப்பு கவன தீர்மானம் இயற்றி வலியுறுத்த வேண்டும்.
தங்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து தொழில் முனை வோர் கூட்டமைப்பின் சார்பில் நவம்பர் 9ம் தேதி கோவையில் மாநில மாநாடு நடத்த திட்டமிடப்பட்டி ருப்பதாகவும் இதில் தொழில்துறை மட்டும் அல்லாமல் அனைத்து சங்கங்கள் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுக்க இருப்பதாக தெரிவித்தனர். மத்திய மாநில அரசுகள் தனியார் பெருநிறுவனங்களின் நல னையே விரும்புகின்றன. அவர்களுக்கு முக்கியத் துவம் அளிப்பது போல சிறுகுறு தொழில் நிறுவனங் ஙகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க முன்வரவேண்டும்.
எந்த காலகட்டத்திலும் எந்த அரசு வந்தாலும் கார்ப்பரேட் செக்டாரில் இருப்பவர்கள் தான் முன்னால் நின்று அரசை இயக்குகிறார்கள். இதனை மாற்ற வேண்டும். அதற்கு இந்தக் கூட்டமைப்பு வலு பெற வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.



