fbpx
Homeதலையங்கம்மாணவர்களுக்கு மின்சார விழிப்புணர்வு அவசியம்!

மாணவர்களுக்கு மின்சார விழிப்புணர்வு அவசியம்!

அண்மையில் கோவை மாநகரின் குடியிருப்பு வளாகத்தில் உள்ள பூங்காவிற்கு விளையாடச் சென்ற இரண்டு சிறுவர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கோடை விடுமுறையில் உள்ள மாணவர்கள் விளையாடும் போது கிரிக்கெட் பந்து எடுக்க மாடிக்கு செல்வது, மரத்தில் ஏறுவதை தவிரக்க வேண்டும். அப்படி செல்ல நேரிட்டால், மேலே மின்கம்பி, மின்கம்பம் அருகே செல்லக் கூடாது. பூங்காக்களிலோ அல்லது பொது இடத்திலோ விளையாடும் போது மின்கேபிள், ஒயர், மின்பெட்டி இருந்தால் அருகில் செல்லவோ, தொடவோ கூடாது.

மேலும், குழந்தைகள் விளையாடும் போது பெற்றோர் கண்காணிக்க வேண்டும். இதுகுறித்து, ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதேபோல பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு மின்சாரத்தின் ஆபத்துக்களை சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மின்வாரியமும் சமூக வலைத் தளங்களில் தொடர்ந்து மின்சார விபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

தற்போது சில இடங்களில் வெயில் கொளுத்தினாலும் பரவலாக தென்மேற்கு பருவ மழை பெய்து வருவதால் அனைவரும் மிகவும் உஷாராக இருந்து மின்சாரத்தால் விலைமதிப்பற்ற உயிரிழப்புகளைத் தடுப்போம்!

படிக்க வேண்டும்

spot_img