fbpx
Homeபிற செய்திகள்தர்மபுரியில் முதல்-வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா

தர்மபுரியில் முதல்-வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா

தர்மபுரி நகர தி.மு.க. சார்பில் முதல்-வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டம் தர்மபுரி வள்ளலார் திட லில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர செயலாளர் நாட்டான் மாது தலைமை தாங்கினார். நகர துணைச் செயலாளர் முல்லை வேந்தன் வரவேற்று பேசினார்.

நகர நிர்வாகிகள் அன்பழகன், அழகு வேல், கனகராஜ், சம்மந்தம், கோமளவல்லி ரவி, நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கட்சியின் மாநில வர்த்தகர் அணி செயலாளர் காசி முத்துமாணிக்கம், கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, மேற்கு மாவட்ட செயலாளர் பி. பழனியப்பன் ஆகியோர் தமிழக அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினர்.

இந்தக் கூட்டத்தில் டாக்டர் செந்தில் குமார் எம்.பி., முன்னாள் எம்.பி.க்கள் எம்.ஜி.சேகர், தாமரைச்செல்வன், மாநில வர்த்தகர் அணி துணைச் செயலாளர் மெடிக்கல் சத்தியமூர்த்தி, சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் டாக்டர் தருண், மாவட்ட பொருளாளர்கள் தங்கமணி, முருகன், மாவட்ட துணை செயலாளர்கள் வக்கீல் ஆ. மணி, ரேணுகாதேவி, உமாசங்கர், ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் சேட்டு, சண்முகம், வைகுந்தன், மல்லமுத்து, சபரிநாதன், கருணாநிதி, சார்பு அமைப்பு மாவட்ட அமைப்பாளர்கள் எம்.ஜி.எஸ். வெங்கடேஸ்வரன், சிவகுரு, தடங்கம் இளைய சங்கர், பெரியண்ணன், கௌதம், வக்கீல் அசோக்குமார் கோவிந்தன், ராஜா, ரஹீம், ரவி, குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், நகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பிரதிநிதி சுருளிராஜன் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img