தர்மபுரி வட்டார வேளாண் விரிவாக்கம் மையத்தில் உழவர் திருவிழா நேற்று நடைபெற்றது விழாவிற்கு வேளாண் இணை இயக்குநர் கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆ.கோவிந்தசாமி எம்எல்ஏ கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில் வேளாண்மை உதவி இயக்குனர் தர்மபுரி மு.இளங்கோவன் வேளாண்மை துறையின் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார். தோட்டக்கலைத் துறை,வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, பட்டு வளர்ச்சி துறை, வேளாண்மை பொறியியல் துறை, கால்நடைதுறை, மீன்வளத்துறை மற் றும் வனத்துறை என அனைத்து துறை அலுவலர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கலந்துகொண்டனர்.
இயற்கை வேளாண்மையில் பாரம்பரிய நெல் சாகுபடி காய்கறிகள் உற்பத்தி பூச்சி கட்டுப்பாடு குறித்து முன்னோடி விவசாயிகளான திரு எஸ் பி பெருமாள் மற்றும் அவர்களின் மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது. மணிவண்ணன் உதவி வேளாண்மை அலுவலர் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
இதில் தர்மபுரி வட்டார வேளாண்மை அலுவலர் உதவி வேளாண்மை அலுவலர்கள் ஆத்மா திட்ட பணியாளர்கள் மற்றும் திருந்திய பயிர் காப்பீட்டு திட்டத்தின் களப்பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் மற்றும் தர்மபுரி வட்டாரத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.