நீலகிரி மாவட்டத்தில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ‘பெண்கள் முதலீடு செய்யுங்கள், முன்னேற்றத்தை விரிவு படுத்துங்கள்” என்ற கருத்துருவை மையமாக கொண்டு, இருளர் பழங்கு டியினர் கிராமத்தில் சர்வதேச மகளிர் தின விழா மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா
தலைமையில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், மகளிர் களுக்கு பல்வேறு விதமான போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பரிசு வழங்கினார். முன்னதாக பழங்குடியின மாணவியர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் கேக் வெட்டி மகளிர் தினத்தை கொண்டாடினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, மாவட்ட சமூகநல அலுவலர் பிரவீணா தேவி, கோத்தகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜனார்த்தனன், விஜயா உட்பட பலர் கலந்து கொண்டனர்.