fbpx
Homeபிற செய்திகள்கோவை நகைக்கடை கொள்ளை வழக்கு: 99.5 சதவீத நகைகள் மீட்பு கொள்ளையன் சிக்கியது எப்படி? துணை...

கோவை நகைக்கடை கொள்ளை வழக்கு: 99.5 சதவீத நகைகள் மீட்பு கொள்ளையன் சிக்கியது எப்படி? துணை ஆணையர் பேட்டி

கோவை காந்திபுரம் 100 அடி ரோட்டில் உள்ள பிரபல நகைக்கடையில் நடந்த கொள்ளை சம்பவத்தில் விஜய் என்பவரை போலீசார் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வைத்து கைது செய்தனர். இந்த நிலையில் கோவை மாநகர வடக்கு போலீஸ் துணை கமிஷனர் சந்தீஷ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:

காந்திபுரம் நூறடி ரோட்டில் உள்ள நகை கடையில் கடந்த மாதம் 28ஆம் தேதி கொள்ளை சம்பவம் நடைபெற்றது இந்த கொள்ளை சம்பவத்தில் நகை கடையில் இருந்த வைரம் பிளாட்டினம் தங்கம் உட்பட 5.15 கிலோ கிராம் நகைகள் கொள்ளை போயிருந்தது இது சம்பந்தமாக ரத்தினபுரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார் மேலும் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் ஐந்து தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையில் உதவி கமிஷனர் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 48 போலீசார் கொள்ளையனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கொள்ளையன் ஆனைமலையில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது உடனடியாக போலீசார் அங்கு சென்று வீட்டை சுற்றி வளைத்தனர் அப்போது விஜய் 15 அடி உயரமுள்ள மேற்கூரையை பிரித்து போலீசாரிடம் இருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் தர்மபுரி சென்ற அவர் வனப்பகுதியில் பதுங்கி இருந்தார். அவர் திடகாத்திரமாக விளையாட்டு வீரரை போல ஓடும் திறனும், குதிக்கும் திறனும் கொண்டவர். எளிதாக போலீசாரிடம் மாட்டாமல் தப்பித்து வந்தார்.

தொடர்ந்து தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர் அப்போது கொள்ளையன் விஜய் பகலில் ஏதாவது ஒரு ஊரில் தங்குவதும் இரவில் பஸ் ஏறி மற்றொரு ஊருக்கு பயணம் செய் வதுமாக இருந்தார் இதனால் போலீசார் அவரை நெருங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. போலீசார் தொடர்ந்து கண்காணித்த போது அவர் ஆந்திர மாநிலம் காள கஸ்தி, திருப்பதி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்தார். அவர் காளகஸ்திலிருந்து சென்னைக்கு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது இதனை அடுத்து தனிப்படை போலீசார் அவரை பின் தொடர்ந்து சென்றனர். அப்போது அவர் உறவினரிடம் பேசுவதற்காக சிம் கார்டு வாங்குவதற்கு முயற்சி மேற்கொண்டுள்ளார் ஆதார் கார்டு இல்லாததால் சிம் கார்டு வாங்க முடியவில்லை கோயம்பேடு பஸ் நிலையத்தில் உள்ள ஒரு செல்போன் கடையில் சிம்கார்டு வாங்க முயற்சி செய்தபோது தனிப்படை போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

பின்னர் தனிப்படை போலீசார் அவரிடம் இருந்து 700 கிராம் வெள்ளி தர்மபுரியில் உள்ள உறவினர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட 42 கிராம் தங்கம் ரூ 20,000 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தோம் கொள்ளை யடிக்கப்பட்ட 5.15 கிலோவில் 5.12 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது கொள்ளை போன நகைகளில் 99.5% ஆகும். குற்றவாளியை பிடிக்க கடுமையாக உழைத்த அனைத்து போலீசாருக்கும் தர்மபுரி மாவட்ட போலீசாருக்கும் பொது மக்களுக்கும் எங்களது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் விஜய் பிரபல நகைக்கடையில் கொள்ளை அடிக்கும் நோக்கில் செல்லவில்லை அவர் அங்குள்ள ஏதோ ஒரு செல்போன் கடையில் கொள்ளை அடிக்க திட்டமிட்டு சென்று உள்ளார்.

அப்போது அந்த கடையில் புதியதாக பொருட்கள் இறக்கி கொண்டிருந்தனர் மேலும் அங்கு பொதுமக்கள் நடமாட்டம் இருந்த தால் விஜய் அங்கு செல்லவில்லை பின்னர் அவர் சங்கு சந்தாக சுத்தி திரிந்தபோது நகை கடையின் சந்தில் நுழைந்தபோது பிளைவுட்டில் சிறிய ஓட்டை இருந்தது. அதன் வழியே 20 நிமிடம் ஊர்ந்து சென்று கடைக்குள் நுழைந்துள்ளார். அவர் உள்ளே நுழைந்ததும் நகைகளை கொள்ளை அடிக்க நினைக்க வில்லை கடையில் பணம் ஏதாவது உள்ளதா என பார்த்துள்ளார் பணம் கிடைக்காத தால் மூன்று மாடிகளிலும் உள்ள அவருக்கு பிடித்த நகைகளை மட்டும் எடுத்து நகை கடையில் இருந்த பையிலே போட்டு சென் றுள்ளார்.

இன்று பிற்பகலில் அவரை ஜேஎம் 2 கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.உடன் கோவை மத்திய தொகுதி போலீஸ் உதவி கமிஷனர் கணேஷ், இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர்இருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img