மரவேலை மற்றும் ஃபர்னிச் சர் உற்பத்தி பிரிவை சேர்ந்த முன்னணியாளர்கள் ‘டெல்லிவுட் 2023’-ல் பல தேசிய மற்றும் சர்வதேச தொழில்துறையினரை சந்திக்கவும், புதிய வாடிக்கையாளர்களை பெறவும், டிஜிட்டல் மயமாக்கல், நிலைத்தன்மை, திறன், விநியோக சங்கிலி மேலாண்மை உள்ளிட்ட முக்கிய சிக்கல்களை பற்றி விவாதிக்கவும் உள்ளனர்.
மார்ச் 2 முதல் 5-ம் தேதி வரை நடைபெறவிருக்கும் டெல் லிவுட்டின் 7வது பதிப்பில், கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியா எக்ஸ்போ மார்ட் டில் (டெல்லி, என்சிஆர்), மரவேலைப்பாடு மற்றும் ஃபர்னிச்சர் உற்பத்தி துறையை சேர்ந்த பங்குதாரர்கள் பல தேசிய மற்றும் சர்வதேச தொழில்துறையினரை சந்திக்கும் வாய்ப்பை பெறுவார்கள்.
அறிவு பகிர்வு மன்றமாக, டெல்லியில் முன்னணி தொழில் துறை சங்கங்கள் ஏற்பாடு செய்துள்ள சமீபத்திய டிரெண் டுகள் மற்றும் புதுமைகள் பற்றிய பல கருத்தரங்குகள் மற்றும் இந்திய ஃபர்னிச்சர் – ஃபிட்டிங்ஸ் ஸ்கில் கவுன்சில் ஏற்பாடு செய்யும் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகளும் இடம்பெறும். இந்திய மெட்ரெஸ்டெக் + அப்ஹோல்ஸ்டரி சப்ளைஸ் எக்ஸ்போ (ஐஎம்இ)(INDIA MATTRESSTECH + UPHOLSTERY SUPPLIES EXPO (IME)),, மெத்தை உற்பத்தி இயந்திரங்கள் மற்றும் பொருட் கள், மெத்தை ஃபினிஷிங் இயந்திரங்கள் மற்றும் பொருட்கள், உற்பத்தி கருவிகள் மற்றும் உப கரணங்கள், மெத்தை உற்பத்தி தொழில்நுட்பம், இயந்திரங்கள் மற்றும் பொருட்கள், படுக்கை அமைப்புகள், புதிய பொருட்கள், வர்த்தக சங்கங்கள், வணிக சேவைகள் மற்றும் ஊடகங்கள் ஆகியவை காட்சியில் இடம் பெறும்.
மெத்தை தொழில்நுட்ப துறை யில் நுழையும் சிறந்த தயாரிப்புகள் மற்றும் புதுமையான நிறு வனங்களுக்கான தேவை அதி கரித்து வருவதால், வரும் காலங்களில் இந்தியாவில் சந்தை கணிசமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நூர்ன்பெர்க்மெஸ்ஸி இந்தியா நிறுவனத்தின் வாரிய தலைவரும், நிர்வாக இயக்குனருமான சோனியா பிரசார் கூறுகையில், “இந்திய சந்தையில் மர ஃபர்னிச்சர்களுக்கான தேவை முக்கியமாக குடியிருப்பு துறையால் இயக்கப்படுகிறது. மாடுலர் ஃபர்னிச்சர்களின் தேவை சந்தையில் மர ஃபர்னிச்சர்கள் மற்றும் ஹார்டுவேர் உரிமையா ளர்களுக்கு மகத்தான வாய்ப் புகளை வழங்குகிறது.
இந்தத் துறையின் தேவைகளை பூர்த்தி செய்ய தொடர்புடைய தொழில் நுட்பங்கள் மற்றும் தீர்வுகளை வழங்குவதில் டெல்லிவுட் வெற்றி பெறும் என்றார்.
‘உட் இன் ஆர்க்கிடெக்சர் அன்ட் டிசைன் (WAD)’ இன் இரண்டாவது பதிப்பு, ஒரு நாள் மாநாடு, மார்ச் 3-ம் தேதி நடைபெறும்.