fbpx
Homeபிற செய்திகள்மணவாளநல்லூர் மணிமுத்தாற்றில் தடுப்பணை கட்டும் பணி கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மணவாளநல்லூர் மணிமுத்தாற்றில் தடுப்பணை கட்டும் பணி கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

விருத்தாசலம் அருகே உள்ள மணவாளநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்களில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர் இந்த நிலையில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளதால் விவசாயிகள் நீர்பாசனம் இன்றி தவித்து வரும் நிலையில் அருகில் உள்ள மணிமுத்தாற்றில் தடுப்பணை கட்டி ஆற்றில் நீரை சேமித்து அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் நீண்ட நாட்களாகவே கோரிக்கை வைத்து வந்தனர்.

இதை அடுத்து விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் போது தடுப்பணை கட்ட வலியுறுத்தியதன் காரணமாக தமிழ்நாடு அரசு நீர்வளத்துறை வெள்ளாறு வடிநில கூட்டம் சார்பில் மணவாளநல்லூர் மணிமுத்தாற்று ரூ.25 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டுவதற்கு அரசு ஒப்புதல் அளித்து தற்போது தடுப்பணை கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது இப்பணியினை நேற்று மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் மற்றும் எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டனர் அப்போது விரைவாகவும் தரமாகவும் பணியை முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர் விருத்தாச்சலம் செயற்பொறியாளர் அருணகிரி, உதவி செயற்பொறியாளர் எத்திராஜூலு,உதவி பொறியாளர்கள் வெங்கடேசன் பாஸ்கரன் மற்றும் அரசு அலுவலர்கள் விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img