கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் 9 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.6.54 லட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவி களை, ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வழங்கினார்.
மக்கள் குறைதீர் நாள் கூட்டத்திற்கு ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை வகித்தார்.
மாவட்டத்தின் பல் வேறு பகுதிகளில் இருந்து வந்த சுமார் ஆயிரம் பேர் தங்கள் கோரிக்கை மனுக்களை வழங்கினர். ஆட்சியரிடம் முகாமில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 6 மாற்றுத்திறனாளி பய னாளிகளுக்கு தலா ரூ.1,07,000 வீதம் மொத்தம் ரூ.6.42,000 மதிப்பீட்டில் பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.4,700 வீதம் மொத்தம் ரூ.9,400 மதிப் பில் செயற்கை கால் கள், 2 மனு அளித்த ஒரு மாற்றுத்திறனாளி பயனாளிக்கு ரூ.2,745 மதிப்பில் காதொலிக் கருவியை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ம.ராஜசேகரன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ரவி, மாவட்ட வழங்கல் அலுவலர் ராஜீ,உதவி ஆணையர் (கலால்) சந்திர குமார், தனித் துணை ஆட் சியர் ரமா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



