fbpx
Homeபிற செய்திகள்‘நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்‘: கோவையில் யாத்திரை நிகழ்ச்சி

‘நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்‘: கோவையில் யாத்திரை நிகழ்ச்சி


மத்திய அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் ‘நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்‘ யாத்திரை நிகழ்ச்சி கோயம் புத்தூர் மாவட்டம், தீத்திப் பாளையம் பகுதியில் நட பெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.

வேளாண்மை அறிவி யல் நிலையம், தபால் துறை, சுகாதாரத்துறை, வங்கிகள், எரிவாயு நிறுவனங்கள் மற்றும் மத்திய மக்கள் தொடர்பகம் ஆகியவை சார்பில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கும், செல்வமகள் சேமிப்புத் திட்டம் மற்றும் தபால் துறை சேமிப்பு திட்டத்தில் 6 பயனாளிகளுக்கும், ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தில் 2 பயனாளிகளுக்கும், முத்ரா கடன் உதவி திட்டத்தில் இருவருக்கும் திட்டப் பயன்கள் வழங்கப்பட்டது.

முன்னதாக வளர்ச்சிய டைந்த பாரதத்திற்கான உறுதிமொழி ஏற்கப்பட் டது. அதனைத் தொடர்ந்து மெட்ராஸ்உர நிறுவனம் சார்பில் விவசாயத்தில் ட்ரோன் பயன்பாடு குறித்த செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img